மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் வீட்டுக்கு வந்த வெற்றியை மீனாட்சி திட்டி வெளியே அனுப்பும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறவுள்ளது.
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் மீனாட்சியாக அர்ச்சனா நடிக்கிறார். இவருக்கு யமுனா, சக்தி, துர்கா ஆகிய மூன்று மகள்கள். தங்களை விட்டுச் சென்ற கணவருக்கு எதிராக மீனாட்சியும், தந்தைக்கு எதிராக அவரது மகள்களும் வாழ்ந்து காட்டுவதே இந்த சீரியலின் கதைச் சுருக்கமாகும்.
நேற்றைய எபிசோடில் கார்த்திக் யமுனாவை திருமணம் செய்ய அவரது அம்மா கண்டிஷன் ஒன்றை போடுகிறார். அதாவது உங்க அக்கா கல்யாணம் நடக்கணும்னா முதல்ல நீ கல்யாணம் பண்ணனும் என்ற அந்த கண்டிஷனை கேட்டு சக்தி அதிர்ச்சியடைகிறார். விறுவிறுப்பாக போகும் இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை காணலாம்.
மீனாட்சியிடம் கோபித்துக் கொண்டு கோவிலுக்கு வரும் சக்தி இரவு முழுவதும் கோவிலிலேயே தங்கி விடுகிறாள். மேலும் அவர் யமுனாவுக்காக கோயிலில் வேண்டிக்கொண்டு அங்கப்பிரதட்சணம் செய்து கையில் சூடம் ஏற்றி வேண்டுகிறாள். ஆனால் சக்தி இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்று யமுனாவும் துர்காவும் கவலைப்படும் நிலையில் மீனாட்சி சக்தி வருவாள் என சொல்கிறாள்.
இதற்கிடையில் வீட்டுக்கு வந்த வெற்றிக்கு யமுனாவின் நிச்சயதார்த்தம் என உண்மை தெரிய வர தவறு செய்து விட்டோம் என வருத்தப்படுகிறார். அவரை திட்டி மீனாட்சி கதவை சாத்த அங்கே வெற்றியை திடியன் பார்க்கிறார். உடனே ஓடி வந்து சக்தி கோயிலில் தான் இருக்கிறாள் என அங்கு அழைத்துச் செல்கிறான். பின்னர் வெற்றி கோயிலுக்குள்ளே சென்று சக்தியை பார்த்து பேச முயற்சிக்கிறார்.
சக்தியோ கோபமாக வெற்றியிடம் உன்னை நம்புனது என்னுடைய தப்பு. நான் உன்னை காதலிக்கவில்லை. நீ என் கேரக்டரை பத்தி தப்பாக பேசி விட்டாய் என்று அனைவரும் முன்னிலையிலும் திட்டி அவமானப்படுத்துவதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.