Stock Market Update: இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.
பங்குச்சந்தை:
மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 415.30 அல்லது 0.63% புள்ளிகள் குறைந்து 65,403.62 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 127.95 அல்லது 0.72 % புள்ளிகள் குறைந்து 19,490.65 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின. கடந்த சில வாரங்களாகவே இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்
ஏசியன் பெயிண்ட்ஸ், அதானி போர்ட்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, இந்தஸ்லேண்ட் வங்கி, விப்ரோ, டைட்டன் கம்பெனி, பி.பி.சி.எல். எம் &எம் உள்ளிட்ட நிறுவனங்கள் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின.
நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்
ஓன்.என்.ஜி.சி., ஈச்சர் மோட்டர்ஸ், ஹிண்டால்கோ, ஹீரோ மோட்டர்கார்ப், டாடா மோட்டர்ஸ், கோல் இந்தியா, ஜெ.எஸ்.டபுள்யு., அதானி எண்டர்பிரைசர்ஸ், பாரதி ஏர்டெல், ஐ.டி.சி., பவர்கிரிட் கார்ப், கோடாக் மஹிந்திரா வங்கி, ரிலையன்ஸ், க்ரேசியம், டிவிஸ் லேப்ஸ், சன் ஃபார்மா, எஸ்.பி.ஐ., டாடா ஸ்டீல், லார்சன், பஜார்ஜ் ஆட்டோ, இன்ஃபோசிஸ், பிரிட்டானியா,பஜாஜ் ஃபின்சர்வ், டெக் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் நஷ்டத்தில் வர்த்தகமாகி வருகின்றன.
இன்றைய வர்த்த நேர தொடக்கத்தில் க்ரீனில் வர்த்தகமான பங்குச்சந்தை சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 450 புள்ளிகள் வரை சரிந்தது. தங்கம் விலையிலும் சரிவு காணப்பட்டது. மூன்று வாரங்களில் இல்லாத அளவு ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை சற்று குறைந்தது.
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருது சுசூகி செப்டம்பர் மாதத்தில் ஒரு லட்சம் கார் விற்பனை செய்துள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 பைசா சரிந்து 83.3 ஆக இருந்தது.
1450 பங்குகள் லாபத்துடனும், 1518 பங்குகள் சரிவுடனும் 138 பங்குகளின் மதிப்பு மாற்றமின்றி காணப்பட்டது.