இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.


மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 97.35 அல்லது 0.15 % புள்ளிகள் சரிந்து 65,809.82 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 63.45 அல்லது 0.29 % புள்ளிகள் சரிந்து 19,575.90 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின.


வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 307.63 அல்லது 0.47 % புள்ளிகள் சரிந்து 65,688.18 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 89.45 அல்லது 0.46% புள்ளிகள் சரிந்து 19,543.10 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின.


வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டி (ரெப்போ ரேட்) விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் 6.5% விகிதமே தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் அறிவித்துள்ளார்.


அதானி என்டர்பிரைசர்ஸ், இந்தஸ்லேண்ட் வங்கி, அதானி போர்ட்ஸ், டைட்டன் கம்பெனி, ஓ.என்.ஜி.சி., ஜெ.எஸ்.டபுள்யு. எம். அண்ட் என். டெக் மகேந்திரா, பவர்கிரிட் கார்ப், ரிலையன்ஸ், பஜார்ஜ் ஃபினான்ஸ், டிவிஸ் லேப்ஸ், விப்ரோ, கோல் இந்தியா, ஈச்சர் மோட்டர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின.


அதானி போர்ட்ஸ், கோடாக் மகேந்திரா வங்கி, ஐ.டி.சி., அப்பல்லோ மருத்துவமனை, டாடா கான்ஸ், பாரத ஸ்டேட் இன்சுரா, ஆக்சிஸ் வங்கி, நெஸ்லே, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி,க்ரேசியம்,. மாருது சுசூகி, டாடா மோட்டர்ஸ், பஜார்ஜ் ஆட்டோ, இன்ஃபோசிஸ், சிப்ளா, டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், டாடா ஸ்டீல், அல்ட்ராடெக் சிமெண்ட், எஸ்.பி.ஐ. உள்ளிட்ட நிறுவனங்கள் நஷ்டத்தில் வர்த்தகமாகின.


ரூபாய் மதிப்பு


இந்திய ரூபாய் மதிப்பு 13 பைசா உயர்ந்து ரூ.82.71 ஆக இருந்தது. நேற்றைய நிலவரப்படி ரூ.82.83 ஆக இருந்தது.


அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவுடன் இருந்த நிலையில், இன்று உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைவு, உள்நாட்டு சந்தைகளின் மதிப்பு குறைவு ஆகியவற்றால் இந்திய ரூபாய் மதிப்பு அதிகரித்துள்ளது.