ரஜினிகாந்த், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி, ஜீவிதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ள படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் ஜெயிலர் படம் இன்று (ஆகஸ்ட் 10) வெளியாகியுள்ளது.


தமிழ்நாட்டை தாண்டி மாஸ் காட்டும் ரஜினிகாந்த் : 


ரஜினி என்ற ஒரு பெயருக்காகவே தமிழ்நாட்டை தாண்டி உலகெங்கும் ஜெயிலர் படத்தை கொண்டாடி வருகின்றனர். ரிலீஸுக்கு முந்தைய நாளே, கட்-அவுட், பால் அபிஷேகம், சரவேடி என கொண்டாட்டம் தொடங்கிவிட்டது. ஜெயிலர் படத்திற்கான முன்பதிவு தொடங்கி சில மணி நேரத்திலேயே முதல் நாளிற்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தது. சென்னை பொறுத்தவரை முதல் நாள் முதல் காட்சி, காலை 9 மணிக்கு திரையிடப்படவுள்ளது. இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் உலக நாடுகளிலும் காலை 6 மணிக்கு ஃபர்ஸ்ட் ஷோ தொடங்கிவிட்டது. வெளியூரில் படம் பார்த்த மக்கள், முதல் பாதி குறித்த விமர்சனத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். அவற்றை இங்கு காணலாம்.


ட்விட்டர் விமர்சனம் : 


‘முதல் பாதியில் ரஜினியின் இண்ட்ரோ காட்சி, அனிருத்தின் பின்னணி இசை, ரஜினி- யோகி பாபு காம்போ காமெடி சிறப்பாக உள்ளது. பாடல்களும், செண்டிமென்ட் காட்சிகளும் நன்றாக வொர்க்-அவுட் ஆகியுள்ளது. திரைக்கதை புதியதாக உள்ளது. இண்டர்வெல் காட்சி வேற மாறி.. இரண்டாம் பாதியில் காமியோ காட்சிகளில் சர்ப்ரைஸ் உள்ளது.’என ஒருவர் பதிவிட்டுள்ளார்.






‘முதல் பாதி சுமாராக உள்ளது. காமெடி நன்றாக வொர்க்-அவுட்டாகியுள்ளது.’ - இது மற்றொருவரின் பதிவு.






‘முதல் பாதி முடிந்துவிட்டது. நெல்சன் சூப்பர் கம்-பேக் கொடுத்துள்ளார். அனிருத் ஒரே ஃபயர்தான். தலைவர் சொல்லவே வேண்டாம். அவர் காட் ஆஃப் மாஸஸ். இரண்டாம் பாதிக்காக வெயிட்டிங்.’ - ரஜினி ரசிகர் ஒருவரின் விமர்சனம்.






‘பெரிதாக எதுவும் இல்லை. ரஜினி-யோகி பாபு வரும் காட்சிகள் பொறுமையை சோதிக்கும் விதமாக அமைந்துள்ளது. பாடல்கள் எதுவும் வரவில்லை. ஒரே ஒரு ஆக்‌ஷன் காட்சியுள்ளது. சுமாரான இண்டர்வெல் காட்சி. சுமாரிலும் சுமாராக உள்ளது’ என முதல் பாதி குறித்து பதிவிட்டுள்ளார் ஒருவர்.






‘மோசமான திரைக்கதை, லாஜிக் இடிக்கிறது, டார்க் காமெடியும் வொர்க்-அவுட் ஆகவில்லை, முதல் பாதி ஓகே, இரண்டாம் பாதி சொதப்பல். ஆகமொத்தம், ஜெயிலர் ஒரு விபரீதம்’- ரசிகர் ஒருவரின் ட்வீட்.





“நல்ல முதல் பாதிக்குப் பிறகு இரண்டாம் பாதியில் சொதப்பி இருக்கிறது. தமிழ் சினிமாவில் இரண்டாம் பாதி சாபம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கவலைக்கிடமான சூழ்நிலை” எனத் தெரிவித்துள்ளார்.






”ஃபேன்ஸை குஷியாக்க படத்தின் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் போதும். ஆனால் ப்ரீ க்ளைமேக்ஸில் நெல்சன் ஸ்கோர் செய்துள்ளார். உங்கள் குரல் வளையை பாத்துக்கோங்க” எனத் தெரிவித்துள்ளார்.