இந்திய பங்குச்சந்தை கடும் சரிவிலிருந்து மீண்டு வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. பங்குச்சந்தை மதிப்பு வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு ஊக்கம் அளித்துள்ளது. 


பங்குச்சந்தை ஏற்றம்:


காலை 11.30 மணி நிலவரப்படி, இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தமாகி வருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,372.11 அல்லது 1.94 % புள்ளிகள் உயர்ந்து 73.453.67 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 438.00 அல்லது 2.00 புள்ளிகள் உயர்ந்து 22,319.95 ஆக வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.


பங்குச்சந்தை வர்த்தக நேர தொடக்கத்தில் சென்செக்ஸ் 200 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகத்தை தொடங்கியது.தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (பா.ஜ.க.விற்கு) சாதகமாக உள்ள நிலையில், மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 2,507 அல்லது 3.39 % புள்ளிகள் உயர்ந்து 76,468.78 வர்த்தகத்தை பதிவு செய்தது. 


நேற்றைக்கு தேர்தல் முடிவுகள் வந்தவுடன், பங்குச்சந்தை கடுமையான சரிவை பதிவு செய்தது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 4,500  புள்ளிகள் சரிந்து 72,241.18 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 1,369 அல்லது 5.81% புள்ளிகள் சரிந்து 21,918.30 ஆக வர்த்தகமாகியது. இரண்டு நாட்களுக்கு முன் 76 ஆயிரம் புள்ளிகளில் வர்த்தகமான சென்செக்ஸ், 4000 ஆயிரம் புள்ளிகள் சரிந்து மீண்டுள்ளது. சந்திரபாபு நாயுடு உத்திரவாதம் அளித்த நிலையில், இப்போது 73 ஆயிரம் புள்ளிகளில் வர்த்தகமாகிறது. 


லாபத்துடன் வர்த்தகமாகும் நிறுவனங்கள்..


அதானி போர்ட்ஸ், இதஸ்லேண்ட் வங்கி, ஹிண்டால்கோ, ஹீரோ மோட்டர்காஃப், எம் &எம், டாடா ஸ்டீல், அதானி எண்டர்பிரைசர்ஸ், ஸ்ரீராம் ஃபினான்ஸ், டாடா கான்ஸ் ப்ராட், பஜாஜ் ஃபினான்ஸ், கோடக் மஹிந்திரா, ஓ.என்.ஜி.சி. ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்,டி.எஃப்.சி. வங்கி, ஜெ.எஸ்.டபுள்யு. கோல் இந்தியா, டிவிஸ் லேப்ஸ், பஜாஜ் ஆட்டோ, சன் பார்மா, ஏசியன் பெயிண்ட்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, பாரதி ஏர்டெல், நெஸ்லே, விப்ரோ, பிரிட்டானியாம் டாடா மோட்டர்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின. 


நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்..


பாரதி டைனமிக்ஸ், கார்டன் ரீச், டாடா பேட்டர்ன்ஸ், ஒன்97, அதானி எனர்ஜி, ஆயில் இந்தியா, ஏத்தர், செல்லோ வேர்ல்டு ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்தில் வர்த்தகமாகின.