இந்திய பங்குச்சந்தை கடும் சரிவுடன் வர்த்தகமானது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 811.30 அல்லது 1.00 % புள்ளிகள் சரிந்து 81,378.60 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 228.70 அல்லது 0.91% புள்ளிகள் சரிந்து 24,918.55 ஆக வர்த்தகமாகியது.


வர்த்தகம் தொடங்கியதில் இருந்து சென்செக்ஸ் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.  ஒரே நாளில் 950 புள்ளிகள் அளவு சென்செக்ஸ் சரிவடைந்துள்ளது முதலீட்டாளர்களிடன் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பங்குச்சந்தை சரிவிற்கு காரணங்கள் பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவிக்கையில், சர்வதேச பங்குச்சந்தையில் நிலவும் மெதுவான தன்மையும், அமெரிக்க பங்குச்சந்தையில் உள்ள மூன்று நிறுவனங்களுன் பங்குகள் ஓர் இரவில் சரிவை சந்தித்ததன். இதனால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றன. இது இந்திய பங்குச்சந்தையிலும் பிரதிபலித்தது. அமெரிக்க பொருளாதார நிலை ஏற்றம் காணுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அது பங்குச்சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 


லாப - நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்:


எல்.டி.ஐ. மைண்ட்ரீ, பஜாஜ் ஃபினான்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், ஹெச்.யு.எல்., ஜெ.எஸ்.டபுள்யு ஸ்டீல், பிரிட்டானியா, ஸ்ரீராம் ஃபினான்ஸ், டிவிஸ் லேப்ஸ், விப்ரோ, பஜாஜ் ஃபின்சர்வ், சன் பார்மா ஆகிய நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமானது. 


எஸ்.பி.ஐ., ஹெச்.டி.எல்., டெக், கோல் இந்தியா, என்.டி.பி.சி., டாடா மோட்டர்ஸ், பி.பி.சி.எல்., அதானி போர்ட்ஸ், லார்சன், இன்போசிஸ், பவர்கிரிட் கார்ப், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஐ.டி.சி., ரிலையன்ஸ், க்ரேசியம், அல்ட்ராடெக் சிஎம்ண்ட், ஆக்சிஸ் வங்கி, எம் & எம், ஹெச்.டி.எஃப்.சி. லைஃப், இந்தஸ்லேண்ட் வங்கி, மாருதி சுசூகி, ஈச்சர் மோட்டர்ஸ், டைட்டன் கம்பெனி, பாரதி ஏர்டெல், ஓ.என்.ஜி.சி.,ம் டி.சி.எஸ்., சிப்ளா, டாடா ஸ்டீல், அதானி எண்டர்பிரைசிஸ், நெஸ்லே, டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா,  கோடாக் மஹிந்திரா, பஜாஜ் ஆட்டோ, ஹிண்டால்கோ ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்துடன் வர்த்தகமாகின.