பங்குச் சந்தை இன்று சரிவுடன் தொடங்கியது. ரஷ்யா –உக்ரை போரின் விளைவு தொடர்ந்து பங்குச் சந்தை கடும் சரிவை சந்தித்து வருகிறது.


இந்திய பங்குச் சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று சரிவுடன் தொடங்கியது.  இன்றைய நிலவரப்படி,  மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,439 புள்ளிகள் சரிந்து 52,893 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது. அதேபோல், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 405 புள்ளிகள் அல்லது 15,839 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது.


 ஐசிஐசிஐ வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், மாருதி சுசூகி, எல்&டி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியுடன் வர்த்தகமாகின்றன. சென்செக்ஸ் பங்குகளில், பஜாஜ் ஃபைனான்ஸ் 5.71 சதவீதம் சரிந்து ரூ.6,211 ஆக இருந்தது. மாருதி சுசுகி 5.74 சதவீதம் சரிந்தது. சுசுகி 5.74 சதவீதம் சரிந்து ரூ.6,828.70 ஆக உள்ளது. ஐசிஐசிஐ வங்கி, மஹிந்திரா & மஹிந்திரா, பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் லார்சன் அண்ட் டூப்ரோ 4-5 சதவீதம் சரிந்தன. சென்செக்ஸ் பெரும்பாலான 2,861 பங்குகளில் 2,186 பங்குகள் சிவப்பு நிறத்தில் வர்த்தகம் செய்யப்பட்டன. மொத்தத்தில் 207 பங்குகள் வீழ்ச்சியுடன் வர்த்தகமாகி வருகிறது.


அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அரசுகள்  ரஷ்ய அரசின் மீதான இறக்குமதி தடை காரணமாக இன்று  எண்ணெய் விலை அதிகரித்தது.


உலகின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதியாளராக இந்தியா உள்ளது. இதனால் இந்தியாவில்  விலைவாசி உயர்வு, நடப்பாண்டு பணப் பற்றாக்குறை ஆகியவை அதிகரிக்கும். , அதே நேரத்தில் இது இறக்குமதி பணவீக்கத்தை அதிர்கரிக்கிறது. ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ரஷ்யாவின் மிகப்பெரிய வங்கிகள் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் அதன் நிதி நிறுவனங்களை ஸ்விஃப்ட் (SWIFT) உலகளாவிய கட்டண முறையிலிருந்து விலகுவது ஆகியவை காரணங்களால் பங்குச் சந்தை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது.


ரஷ்யா-உக்ரைன் மோதல் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு குறித்து முதலீட்டாளர்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.  இந்த வாரமும் பங்குச் சந்தை சரிவு தொடர வாய்ப்புள்ளது.  மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் இந்த வாரம் அறிவிக்கப்படும்.  இது பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை மீது கடும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.  ஆசியா, ஹாங்காங், ஷாங்காய், ஜப்பான், தென் கொரியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற முக்கிய சந்தைகளில் பங்குகள் சிவப்பு நிறத்தில் வர்த்தகம் செய்யப்பட்டதால், சந்தை வீழ்ச்சியுடனே வர்த்தம் ஆகிறது.


கச்சா எண்ணெய் மட்டும் அல்ல அலுமினியம், தாமிரம், பாமாயில் மற்றும் கோதுமை விலைகள் உலக அளவில் கடுமையாக உயர்ந்துள்ளது. துத்தநாகத்தின் விலை 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது