2022-ம் ஆண்டு தொடங்கிய முதல் மாதத்தில், இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடும் சரிவை சந்தித்திருக்கிறது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் ஒமிக்ரான் வைரஸாக உருமாகி அச்சுறுத்தி வருவதால், முதலீட்டாளர்கள் கவலையில் உள்ளனர். இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் இறங்கி ஏறிய இந்திய பங்குச்சந்தைகள், இன்று கடும் சரிவை சந்தித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,387 புள்ளிகள் சரிந்து 57,650 ஆக குறைந்தது. ஜனவரி 18-ம் தேதி 61,475 புள்ளிகள் தொட்டது. தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 422 புள்ளிகள் சரிந்து 17,195 புள்ளிகளாக இருந்தது. இன்றைய நாளில், தொடர்ந்து பங்குச்சந்தை சரிவை சந்தித்து வருகிறது.
பிற்பகல் 2:30 மணி நிலவரப்படி, 30-பங்குகளின் மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,900 புள்ளிகள் குறைந்து 57,358 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 510 புள்ளிகள் சரிந்து 17,106 இருந்தது.
நிறுவனங்களைப் பொருத்தவரை, பஜாஜ் ஃபைனான்ஸ் மிகப்பெரிய சதவீத இழப்பை சந்தித்தது. அந்நிறுவனத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 5.4 சதவீதம் குறைந்தன. டெக் மஹிந்திரா, டாடா ஸ்டீல், டைட்டன் மற்றும் விப்ரோ ஆகியவற்றின் பங்குகள் தலா 4.5 சதவீதம் குறைந்து நஷ்டமடைந்தன. பங்குச்சந்தை சரிந்ததை அடுத்து, ட்விட்டர் பங்குச்சந்தை சம்பந்தமான அறிவுரைகள் ஒரு புறமும், மீம்ஸ்கள் மறுபுறமும் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்