Stock Market Closing: இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து இரண்டு நாளாக சரிவுடன் முடிவடந்துள்ளது.
மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 18.82 அல்லது 0.031% புள்ளிகள் குறைந்து 60,672 .72 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 17. 90 அல்லது 0.10% புள்ளிகள் குறைந்து 17,826. 70 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின.
மும்பை பங்குச்சந்தையில் உள்ள முக்கிய 30 நிறுவனங்களின் பங்குகளில் 13 நிறுவனங்களின் பங்கு மதிப்பு உயர்ந்தும், 17 நிறுவனங்களின் பங்கு மதிப்பு சரிவுடனும் வர்த்தகமாகின.
நிஃப்டியில் பொதுத்துறை வங்கிகளின் பங்கு 1 சதவீதம் சரிவுடன் வர்த்தகமாகின. காலையில் இருந்து பங்குசந்தைகளில் நிலவிய அசாதரண சூழல் காரணமாக பங்குச்சந்தை சரிவுடன் முடிவடைந்துள்ளது.
லாபம்-நஷ்டம்
பிரிட்டானியா, ரிலையன்ஸ், டாடா ஸ்டீல், பவர்கிரிட் கார்ப், டிவிஸ் லேப்ஸ், டாடா கான்ஸ், அதானி போர்ட்ஸ், எம். & எம்., ஹெச்.டி.எஃப்.சி., ஹெச்.டி.எஃப்.சி வங்கி, சிப்லா, பஜார்ஜ் ஃபினான்ஸ், லார்சன், நெஸ்லே ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகின.
அதானி என்டர்பிரைசர்ஸ், அப்பலோ மருத்துவமனை, கோல் இந்தியா, பஜார்ஜ் ஆட்டோ, டாடா மோட்டார்ஸ், யு.பி.எல்., சன் பார்மா, அல்ட்ரா டெக் சிமெண்ட், விப்ரோ, டி,சி,எஸ்., ஹெச்.சி.எல். டெக்., டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ், எஸ்.பி.ஐ. லைப் இன்சுரா, ஹிண்டால்கோ, ஈச்சர் மோட்டார்ஸ், ஓ.என்.ஜி.சி., ஐ.டி.சி., டைட்டன் கம்பெனி, ஆக்ஸிஸ் வங்கி,ஏசியன் பெயிண்ட்ஸ், பாரதி ஏர்டெல், ஹீரோ மோட்டர்கார்ப் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியடைந்தன.