வேலூர் அடுத்த சித்தேரி பகுதியைச் சேர்ந்தவர் நரேஷ் குமார், வயது (40). இவர் திருமணத்திற்கு தாம்பூல பை தயாரிக்கும் கடையில் பணிபுரிந்து  வருகின்றார். இவர் கடந்த 18-ஆம் தேதி மகா சிவராத்திரியை முன்னிட்டு நரேஷ் குமார் குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிக்கொண்டு வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் ஆலயத்திற்கு சென்றுள்ளார். மகா சிவராத்திரி முடித்துக்கொண்டு மறுநாள் காலையில்  வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது  வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக  உள்ளே சென்று பார்த்துள்ளார்‌. அரையில் பீரோவில் வைத்திருந்த துணிகள் சிதறி கிடந்தது. 


 




இச்சம்பவம் குறித்து நரேஷ் குமார் அரியூர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார். இந்த புகாரின்  காவல்துறையினர் உடனடியாக நரேஷ் குமார் வீட்டிற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில்  பீரோவில் வைத்திருந்த 11 சவரன் தங்க நகை, 25 கிராம் வெள்ளி பொருட்கள் காணாமல் போனது தெரியவந்தது. உடனடியாக கைரேகை நிபுணர்கள் கைரேகைகளை சேகரித்து சென்றனர். அதடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் திருட்டு நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவின் காட்சிகளை சேகரித்து அதில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்தா வந்து விசாரணை மேற்கொண்டனர்.அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த அர்ஜுன் என்கிற ராஜ்குமார் என்பதும், நரேஷ் குமார் வீட்டில் திருடியதும் தெரிய வந்தது. 


 




 


இதை அடுத்து அவரிடம் இருந்து 11 சவரன் தங்க நகை 750 கிராம் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் அர்ஜுன் ராஜ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வட்டாரத்தில் கூறுகையில், கைது செய்யப்பட்ட அர்ஜுன் ராஜ்குமார் ஏற்கனவே திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு தற்பொழுது காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகின்றார். இந்த நிலையில் இவர் instagram-இல் பழகிய கோவையை சேர்ந்த பெண் தோழியை பார்க்க செல்ல முடிவு செய்துள்ளார். அந்த பெண் தோழிக்கு பரிசளிக்க அர்ஜுன் ராஜ்குமார் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது என்றனர். இன்ஸ்டாகிராம் தோழிக்கு பரிசளிக்க பக்கத்து வீட்டிலேயே நகை திருடிய வாலிபர் கைதான சம்பவம் சித்தேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.