Share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது ஏற்றத்தில் தொடங்கி வர்த்தமாகி வருகிறது.


மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 443.39 அல்லது  0.74 % புள்ளிகள் உயர்ந்து 59,993.29 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 129.90 அல்லது 0.74% புள்ளிகள் உயர்ந்து 17,792.05 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது. 


கடந்த வாரம் முழுவதுமே இந்திய பங்குச்சந்தையானது பலத்த அடிவாங்கியது.  சென்செக்ஸ் 60 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழும், நிப்ஃடி 18 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழும் இருந்தது. ஆனால் நாடாளுமன்றத்தில் இன்று 2023 -2024ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில் இந்திய பங்குச்சந்தையானது இன்று ஏற்றத்தில் தொடங்கி உள்ளது முதலீட்டாளர்கள் மத்தியல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


லாபம் - நஷ்டம்


பிரிட்டானியா, ஐசிஐசிஐ வங்கி, ஹின்டல்கோ, டெக் மகேந்திரா, ஹிரோ மோட்டோகோர்ப், டாடா கான்ஸ், ஏசியன் பையின்ட்ஸ், எச்டிஎஃப்சி வங்கி, கோடக் மகேந்திரா, சிப்ளா, விப்ரோ, எச்சிஎல் டெக், பஜாஜ்  பைனான்ஸ், என்டிபிசி, நெஸ்டீலே, டிசிஎஸ், அப்போலோ மருத்துவமனை, கோல் இந்தியா, டாடா மோட்டார்ஸ், எஸ்பிஐ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.


சன் பார்மா, பிபிசிஎல், ஐடிசி, எம்எம், அல்ட்ரா டெக் சிமெண்ட், லார்சன், மாருதி சுசிகி, யுபிஎல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.


இவ்வளவு நாள் சரிவுக்கு என்ன காரணம்?


கடந்த வாரம் முதல் நேற்று வரை இந்திய பங்குச்சந்தையானது பலத்த அடிவாங்கியது. அதாவது, சென்செக்ஸ் 60 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழும், நிப்ஃடி 18 ஆயிரத்திற்கு கீழும் சரிந்துள்ளது. அந்த வகையில், கடந்த ஆண்டினை போலவே இந்திய சந்தையில் இருந்து அன்னிய முதலீடுகள் வெளியான நிலையில், இந்த ஆண்டும் அன்னிய முதலீடுகளானது வெளியேறி வருகின்றது. இதுவரையில் பங்கு சந்தையில் இருந்து 1.6 பில்லியன் டாலர் அளவுக்கு வெளியேற்றம் கண்டுள்ளதாக தெரிகிறது.


இவ்வளவு நாட்கள் பங்குச்சந்தை சரிவோடு இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் மீண்டது. மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ரூபாயின் மதிப்பு:






அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து  81.78 ரூபாயாக உள்ளது.




மேலும் படிக்க


Budget 2023: விவசாயம் முதல் கிரிப்டோ வரை... மக்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள மத்திய பட்ஜெட்..!


Budget 2023 Expectations: மனநலம், டிஜிட்டல் மயம்- பட்ஜெட்டில் கல்வித்துறை எதிர்பார்ப்புகள் என்ன?- ஒரு பார்வை