சென்னையில் கல்லூரி மாணவியைக் கடத்தி வீட்டில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த வேன் ட்ரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்


கல்லூரி மாணவி..


சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த ஒருவரின் மகள் அதேப்பகுதியில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். 17 வயதான சிறுமி தினமும் வீட்டில் இருந்தே கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 28ம் தேதி கல்லூரிக்குச் சென்ற சிறுமி மாலையில் வீட்டுக்குத் திரும்பவில்லை. சிறுமிக்காக காத்திருந்த அவரது பெற்றோர் ஒரு கட்டத்துக்கு பிறகு காவல் நிலையத்திற்கு சென்று புகாரளித்துள்ளார். இது குறித்து அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் மாணவியை இளைஞர் ஒருவர் கடத்திச் சென்றது தெரியவந்தது.


மேலும் படிக்க : சீர்காழியில் 2 குழந்தைகளை கொன்று, தாயும் தூக்கிட்டு தற்கொலை! கடன் பிரச்சனையால் விபரீதம்..




அந்த வாலிபரின் செல்போன் எண்ணை வைத்து போலீசார் தீவிரமாக பின் தொடர்ந்தனர். அந்த எண் திருச்சியில் உள்ள ஒரு ஏரியாவை தொடர்ந்து காட்டியது. இதனை அடுத்து தனிப்படை போலீசார் திருச்சிக்கு சென்று குறிப்பிட்ட ஏரியாவில் சல்லடைப் போட்டு தேடினர். அங்கே தனி வீடு எடுத்து சிறுமியை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு வந்த வேன் ட்ரைவரை போலிசார் கைது செய்தனர். பின்னர் இருவரையும் அண்ணா நகர் காவல்நிலையத்துக்கு அழைத்து வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.


மேலும் படிக்க : அமைச்சர் அன்பில் மகேஷ் பேரை சொல்லி 8.5 லட்சம் மோசடி - முருகன் சிக்கியது எப்படி? தட்டித்தூக்கிய காவல்துறை..


கல்லூரி பழக்கம்..


திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த முனுசாமி (26) என்பவர் சிறுமி படித்த அதே கல்லூரியில் வேன் ட்ரைவராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது சிறுமியோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறி  திருச்சிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இதனை அடுத்து  முனுசாமி மீது போக்சோ வழக்கு தொடர்ந்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.




ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்