தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்திய பங்கு சந்தை சரிவிடன் காணப்படுகின்றன. இந்நிலையில் மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 518.64 புள்ளிகள் சரிந்து 61,144.84 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 147.70  புள்ளிகள் சரிந்து 18,159.95 புள்ளிகள் வர்த்தகமாகின. 






லாபம் - நஷ்டம்:


இந்நிலையில் அதானி போர்ட்ஸ், இன்ஃபோசிஸ், டிசிஎஸ், ரிலையன்ஸ், எஸ்பிஐ. டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் முடிவடைந்தன.


டைட்டான் கம்பெனி, பாரதி ஏர்டெல், பிரிட்டானியா, சிப்ளா, மாருதி சுசுகி, ஆக்சிஸ் வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் முடிவடைந்தன.


தாக்கம்:


உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அண்டை நாடான போலந்து நாட்டில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. நேட்டோ நாடுகளில் உறுப்பினராக இருக்கும் போலந்து மீது ரஷ்யாவின் தீடீர் ஏவுகணை தாக்குதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.


உக்ரைன் மீது ரஷ்யா இடையிலானா போர்  மீண்டும் சூடுபிடிக்குமா என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் இருக்கிறது. இதனால் ஆசிய பங்குச்சந்தை பாதிக்கும் சூழல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் சீனாவில் கொரோனா தாக்கம் முழுமையாக முடியவில்லை. பொருளாதாரம் இயல்பு நிலைக்கு வரவில்லை என்ற கவலை முதலீட்டாளர்களுக்கு இருக்கிறது என கூறப்படுகிறது. இதனால் வர்த்தகம் சரிவில் காணப்பட்டது. மேலும், கச்சா எண்ணெய் விலையிலும் பெரும் தாக்கம் ஏற்பட்டது.


ரூபாய் மதிப்பு:






இன்று டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடையும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாய் மதிப்பானது 11 காசுகள் சரிந்து 81.85 ரூபாயாக ஆக உள்ளது.


Also Read: GST Rate: தனிநபருக்கான வரி விகிதத்தை குறைக்க கோரிக்கை.. பட்ஜெட் குறித்து நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை