Share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்கு சந்தையானது ஏற்றத்தில் தொடங்கியுள்ளது.
இன்று காலை தொடங்கிய பங்கு சந்தையில், மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 183.9 புள்ளிகள் உயர்ந்து 62,865.74 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 61.5 புள்ளிகள் உயர்ந்து 18,679.55 புள்ளிகளாக உள்ளது.
லாபம் - நஷ்டம்
பஜாஜ் ஆட்டோ, ஹின்டல்கோ, எம்&எம், ஐசிஐசிஐ வங்கி, டாடா மோட்டார்ஸ், சிப்ளா, யுபிஎல், கோடக் மகேந்திரா, அல்ட்ரா டெக் சிமெண்ட், அதாணி போர்ட்ஸ், லார்சன், அப்போலா மருத்துவமனை, ஹிரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஃபின்சர்வு, எச்டிஎஃப்சி லைஃப், டைட்டன் கம்பெனி, கோல் இந்நியா, டிசிஎஸ், சன் பார்மா, ஓஎன்ஜிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகுள் ஏற்றம் கண்டுள்ளன.
இன்ஃபோசிஸ், எச்சிஎல் டெக், மாருதி சுசிகி, டெக் மகேந்திரா, பாரதி ஏர்டெல், ஐஓசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.
ரூபாயின் மதிப்பு:
சீனாவில், கொரோனா தொற்று காரணமாக, ஜீரோ கோவிட் திட்டம் கடைபிடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில், பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்தது. இதனால் கச்சா எண்ணேய் விலை குறைந்தது. இதன் காரணமாக டால்ருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வலுவடையும் தன்மை காணப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாய் மதிப்பானது 13 காசுகள் அதிகரித்து 81.59 ரூபாயாக ஆக உள்ளது.