அமெரிக்க பணவீக்கம் சற்று தளர்ந்து வரும் நிலையில், பங்குச் சந்தைகள் தொடர்ந்து ஏற்றத்தில் சென்று கொண்டிருக்கிறது.


மும்பை பங்குச் சந்தை நிலவரம்:


30 பங்குகளில் மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் குறியீடு 321.99 புள்ளிகள் அதிகரித்து 60,115.13 புள்ளிகளில் இன்று முடிவடைந்தது. அதாவது 0.54 சதவீதம் அதிகரித்ததாக கூறப்படுகிறது


மும்பை பங்குகளின் உயர்வால் ஆக்சிஸ் வங்கி, டெக் மஹிந்திரா மற்றும் டாடா ஸ்டீல் ஆகிய பங்குகள் அதிக லாபத்தை அடைந்துள்ளன. ஆர்ஐஎல், இன்போசிஸ், டிசிஎஸ், ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் எல் அண்ட் டி ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் லாபத்தை சந்தித்துள்ளன.


மேலும், எச்.டி.எஃப்.சி வங்கி மற்றும் நெஸ்லே ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.




தேசிய பங்குச் சந்தை நிலவரம்:


தேசிய பங்குச் சந்தை நிஃப்டி -50 குறியீடு 103 புள்ளிகள் அதிகரித்து, 17,900 புள்ளிகளில் இன்று முடிவடைந்தது.


சமீப காலமாக குறைந்து வரும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் மற்றும் சரிந்து வரும் அமெரிக்க டாலர் குறியீட்டெண் ஆகியவை உள்நாட்டு முதலீட்டாளர்களை முதலீடு செய்ய ஊக்குவித்தாக கூறப்படுகிறது.


அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அதிக வட்டி விகிதம் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள், அத்துடன் கோவிட்-19 வரம்புகளை சீனா செயல்படுத்தியதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய்க்கான தேவைகள் வீழ்ச்சியடையச் செய்தன.


கச்சா எண்ணெய் விலை குறைவானது, இறக்குமதியில் உலக அளவில் மூன்றாவது நாடாக உள்ள இந்தியாவுக்கு பெரும் ஆதாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பணவீக்கம் சற்று தளர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் முதலீட்டில் கவனம் செலுத்தியதாக கூறப்படுகிறது.