அமெரிக்காவின் சில்லறை பணவீக்கம் குறைந்ததையடுத்து, இந்திய பங்கு சந்தை பெரிய அளவிலான ஏற்றம் கண்டுள்ளது.


பங்குச் சந்தை நிலவரம்:


மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,181 புள்ளிகள் உயர்ந்து 61,795.04 புள்ளிகளில் வர்த்தகமானது.


தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 321.50 புள்ளிகள் அதிகரித்து 18,349.70 புள்ளிகளில் வர்த்தகமானது.






லாபம்-நஷ்டம்


இன்போ ஏஜ், ஜின்டா ஸ்டீல், எச்டிஎஃப்சி, இன்ஃபொயாஸ், எச்சிஎல், டிசிஎஸ், டெக் மகேந்திரா, அப்போலோ மருத்துவமனை, டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.


இந்தியன் ஹோட்டல், ட்ரெட், முத்தூட் பைனான்ஸ்,  பிரிட்டானியா, எஸ்பிஐ, என்டிபிசி, ஐசிஐசி வங்கி, கோடக் மகேந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.


அமெரிக்காவின் தாக்கம்:


உலகளவில் பணவீக்கம் அதிகரித்ததை தொடர்ந்து, மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்துவதாக, அமெரிக்க மத்திய வங்கி, கடந்த சில வாரங்களுக்கு முன்பு முடிவு எடுத்தது. இதையடுத்து 75 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டு 4 சதவீதமாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது.


இந்நிலையில், அமெரிக்காவின் சில்லறை பணவீக்கம், கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவு குறைந்துள்ளது.


இதனால் அமெரிக்க மத்திய வங்கி, வட்டி விகித கிடுபடியை கைவிட கூடும் சூழல் நிலவுகிறது. இதனால் வெளிநாட்டு முதலீடு, இந்திய பங்குச் சந்தையில் அதிகரிக்கும் தன்மை ஏற்பட்டுள்ளது, இதன் காரணமாக இந்திய பங்கு சந்தை ஏற்றம் கண்டுள்ளது.


சீனாவின் தாக்கம்


மேலும், சீனாவில் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வாகன பயன்பாடு குறைந்துள்ளது


இதனால், கச்சா எண்ணெய் தேவையானது உலகளவில் குறைய வாய்ப்புள்ளதால், கச்சா எண்ணெய்யின் விலை குறையும் சூழல் உள்ளது.






கச்சா எண்ணெயை 80 சதவிகிதம் இறக்குமதி செய்யும் இந்தியா போன்ற நாடுகளுக்கு இதனால் ஆதாயம் ஏற்படும். இதனால் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சற்று அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில், அமெரிக்கு டாலருக்கு எதிரான, இந்திய ரூபாய் மதிப்பானது 60 காசுகள் அதிகரித்து 80.80 ரூபாயாக ஆக உள்ளது.


Also read: Tamil Nadu Rain News Today LIVE: சென்னை உள்பட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.