ட்விட்டர் ப்ளூவுக்கான அதிகம் விவாதிக்கப்பட்ட கட்டணச் சந்தா இந்தியாவில் சிறிது தாமதத்திற்குப் பிறகு வெளிவருவதாகத் தெரிகிறது. ட்விட்டர் ப்ளூ டிக் வாங்குவதற்கு இந்தியாவில் மாதத்திற்கு ரூ.719 கட்டணம் செலுத்தவேண்டும். 


ட்விட்டர் ப்ளூ


ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, யுனைடெட் ஸ்டேட்ஸ் மற்றும் யுனைடெட் கிங்டம் ஆகிய நாடுகளில் உள்ள பயனர்களுக்கு ட்விட்டர் ப்ளூ ஏற்கனவே கிடைக்கப்பெற்றுள்ளது. ஐபோன்கள் மற்றும் ஐபாட் உள்ளிட்ட iOS சாதனங்களுக்கான சந்தா வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில், ட்விட்டர் ப்ளூ சந்தாக்களுக்கான அறிவுறுத்தல்களுக்கு பயனர்கள் எதிர்வினையாற்றத் தொடங்கியுள்ளனர். விலை நிர்ணயம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும் இது குறித்த எதிர்ப்பு வலுத்து வருகிறது. தூண்டுதல்களைப் பெற்ற சிலரின் எதிர்வினைகளைப் பார்க்கும்போது, இந்தியாவில் ட்விட்டர் ப்ளூவின் விலை அமெரிக்காவில் இருப்பதை விட அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது.










இந்தியாவில் கட்டணம் அதிகம்


இந்தியாவிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த கட்டணம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. இது மற்ற நாடுகளில் வசூலிக்கப்படும் வழக்கமான $8ஐ விட அதிகமாக $8.93 ஆக உள்ளது என்பதால் பலர் எதிர்த்து வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்: "தீபாவளிக்கு பின்னர் இந்தியர்கள் எடை கூடியுள்ளது" - காரணம் தெரியுமா? - ஆய்வில் வெளியான தகவல்


இந்தியாவில் ஏற்கனவே பெறத்தொடங்கிவிட்டனர்


இந்த மாத தொடக்கத்தில், புதிய சந்தா இந்தியாவில் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என்று மஸ்க் உறுதிப்படுத்தினார். இந்தியாவில் சில பயனர்கள் ட்விட்டர் ப்ளூ அணுகலை மாதத்திற்கு ரூ.719 க்கு (அதாவது $8.88) பெறத் தொடங்கியுள்ளனர் என்று பயனர்களில் ஒருவர் கூறினார்.






ட்விட்டர் ப்ளூவால் என்ன பயன்?


சேவை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட பிற நாடுகளுடன் பயனர்கள் விலைகளை ஒப்பிடத் தொடங்கினர். அதில் தான் இந்தியாவில் விலை அதிகமாக உள்ளது தெரிய வந்துள்ளது. புதிய வெரிஃபைடு டிக் மூலம், பயனர்கள் பதில்கள், குறிப்புகள் & தேடலில் முன்னுரிமை பெறுவார்கள். இதன் மூலம் ஸ்பேம்/ஸ்கேமை முறியடிக்க முடியும் என்று எலன் மஸ்க் கூறுகிறார். மேலும் பயனர்கள் நீண்ட வீடியோக்கள் மற்றும் ஆடியோவை இடுகையிடும் திறனைப் பெறுவார்கள்.