கடந்த வெள்ளிக்கிழமை பங்குச்சந்தைகள் நிறைவடையும் போது சென்செக்ஸ் 58,644 புள்ளிகளுடனும், நிஃப்டி 17,516 புள்ளிகளுடனும் நிறைவு செய்திருந்தது. இந்நிலையில் வாரத்தின் முதல்நாளான இன்று இந்திய பங்குசந்தை மிகவும் இறக்கத்துடன் தொடங்கியுள்ளன. குறிப்பாக சென்செக்ஸ் சுமார் 700 புள்ளிகள் வரை குறைந்துள்ளது. சென்செக்ஸ் தற்போது 57,951 புள்ளிகளாக உள்ளது. அதேபோல் நிஃப்டியும் 200 புள்ளிகள் குறைந்து 17,313 புள்ளிகளாக உள்ளது.
இன்று எஸ்பிஐ, டாட்டா எஃகு நிறுவனங்களில் பங்குகள் மட்டும் சற்று உயர்ந்து காணப்படுகின்றன. இந்த இரண்டு நிறுவனங்களில் பங்குகள் தவிர ஆட்டோ, ஐடி, வங்கிகள் மற்றும் சுகாதார நிறுவனங்களின் பங்குகள் அனைத்தும் மிகவும் சரிவுடன் காணப்படுகின்றன.
முன்னதாக முன்னதாக சர்வதேச அளவில் காணப்படும் மந்தநிலை காரணமாக கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு திங்கட்கிழமை வர்த்தகத்தில் ஒரே நாளில் சென்செக்ஸ் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் 58 ஆயிரம் புள்ளிளுக்கும் கீழ் சரிந்துள்ளது முதலீட்டாளர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது,
திங்கட்கிழமை நிலவரத்தின்போது சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனப்பங்குகள் அனைத்தும் வீழ்ச்சியில் இருந்து தப்பவில்லை. இந்த வீழ்ச்சிப் பட்டியலில் டாடா ஸ்டீல்ஸ் நிறுவனப் பங்கின் விலை 5.98 சதவீதம் சரிந்து முதலிடத்தில் இருந்தது. இதைத்தொடர்ந்து, பஜாஜ் பைனான்ஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா, டைட்டன், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் விலையும் 4 சதவீதத்திற்கும் மேல் சரிந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியளித்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: வாரத்தின் முதல் நாளில் தங்கம் விலை குறைந்தது - இன்றைய விலை நிலவரம்..!