Sensex Falls: இன்று இறக்கத்துடன் தொடங்கியுள்ளது பங்குச்சந்தை..

இந்திய பங்குச்சந்தை இன்று சற்று இறக்கத்துடன் தொடங்கியுள்ளது.

Continues below advertisement

பிப்ரவரி மாதத்தின் முதல்நாளான நேற்று முன்தினம் மற்றும் நேற்று ஆகிய இரண்டு நாட்களும் பங்குச் சந்தை ஏற்றத்துடன் தொடங்கியது. மேலும் மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு பிறகும் பங்குச்சந்தையில் பெரியளவில் இறக்கம் எதுவும் காணப்படவில்லை. நேற்றை நாளின் முடிவில் சென்செக்ஸ் 59,321 புள்ளிகளிலும், நிஃப்டி 17,717 புள்ளிகளுடனும் நிறைவு செய்தது. 

Continues below advertisement

இந்நிலையில் இன்று காலை முதலே பங்குச்சந்தையில் சிறியளவில் சரிவு காணப்பட்டுள்ளது. இன்றைய நாளின் தொடக்கத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டும் குறைந்துள்ளது. சென்செக்ஸ் சுமார் 90 புள்ளிகள் வரை குறைந்துள்ளது. அதேபோல் நிஃப்டியும் சற்று குறைந்து காணப்படுகிறது. பங்குச்சந்தை நிலவரப்படி தற்போது சென்செக்ஸ் 59,260 புள்ளிகளுடனும், நிஃப்டி 17,698 புள்ளிகளுடனும் உள்ளது. 

இன்று காலை முதல் ஹெச்டிஎஃப்சி, பஜாஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பங்குகள் மிகவும் குறைந்து காணப்படுகின்றன. இவை தவிர தொழில்நுட்ப நிறுவனங்களாக ராம்கோ சிஸ்டம்ஸ், என்ஐஐடி நிறுவனம், இந்தியாமார்ட் உள்ளிட்டவற்றின் பங்குகள் சுமார் 1 சதவிகிதம் வரை குறைந்துள்ளன. மேலும் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு இன்று மீண்டும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக சர்வதேச அளவில் காணப்படும் மந்தநிலை காரணமாக கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு திங்கட்கிழமை வர்த்தகத்தில் ஒரே நாளில் சென்செக்ஸ் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் 58 ஆயிரம் புள்ளிளுக்கும் கீழ் சரிந்துள்ளது முதலீட்டாளர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது,

திங்கட்கிழமை நிலவரத்தின்போது சென்னைசெக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனப்பங்குகள் அனைத்தும் வீழ்ச்சியில் இருந்து தப்பவில்லை. இந்த வீழ்ச்சிப் பட்டியலில் டாடா ஸ்டீல்ஸ் நிறுவனப் பங்கின் விலை 5.98 சதவீதம் சரிந்து முதலிடத்தில் இருந்தது.  இதைத்தொடர்ந்து, பஜாஜ் பைனான்ஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா, டைட்டன், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் விலையும் 4 சதவீதத்திற்கும் மேல் சரிந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியளித்தது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்க: பெட்ரோல், டீசல் விலையின் இன்றைய நிலவரம் இதுதான்!

Continues below advertisement
Sponsored Links by Taboola