Share Market opened : இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கி வர்த்தமாகி வருகிறது.
மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 415.96 அல்லது 0.70 % புள்ளிகள் குறைந்து 58,914. 94 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 103.60 அல்லது 0.59% புள்ளிகள் குறைந்து 17,500.70 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் 60 ஆயிரம் புள்ளிகளும், நிஃப்டி 18 ஆயிரம் புள்ளிகளும் சரிவுடன் கீழே வர்த்தமாகிறது.
லாபம்-நஷ்டம்
அதானி என்டர்பிரைசர்ஸ், அதானி போர்ட்ஸ், பஜார்ஜ் ஃபினான்ஸ், பஜார்ஜ் ஃபின்சர்வ், என்.டி.பி.சி., அல்ட்ராடெக் சிமெண்ட், மாருது சுசூகி, எஸ்.பி.ஐ., கோல் இந்தியா, டாடா மோட்டர்ஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, சன் பார்மா, ஐ.டி.சி., ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்.டி.எஃப். சி., பிரிட்டானியா, உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்தில் உள்ளன.
எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, பவர்கிரிட் கார்ப்ரேசன், ஹெச்.யு.எல்., அப்பலோ மருத்துவமனை, பாரதி ஏர்டெல், ஓ.என்.ஜி.சி., சிப்லா, கோடாக் மஹிந்திரா, ஜெ.எஸ்.டபுள்யு, டிவி லேப்ஸ், டைட்டன் நிறுவனம், இந்தஸ்லேண்ட் வங்கி, டாடா ஸ்டீல், டாக்டர் ரெட்டி லேப்ஸ், ரிலையன்ஸ், டி,சி.எஸ். உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவில் உள்ளன.
என்ன காரணம்?
சென்செக்ஸ் 60 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழும், நிப்ஃடி 18 ஆயிரத்திற்கு கீழும் சரிந்துள்ளது. அந்த வகையில், கடந்த ஆண்டினை போலவே இந்திய சந்தையில் இருந்து அன்னிய முதலீடுகள் வெளியான நிலையில், இந்த ஆண்டும் அன்னிய முதலீடுகளானது வெளியேறி வருகின்றது. இதுவரையில் பங்கு சந்தையில் இருந்து 1.6 பில்லியன் டாலர் அளவுக்கு வெளியேற்றம் கண்டுள்ளதாக தெரிகிறது.
மேலும் வரவிருக்கும் பட்ஜெட் 2023 பற்றிய எதிர்பாப்புகள், அன்னிய முதலீடுகள் வெளியேற்றம், சர்வதேச வளர்ச்சி, சீனாவில் கொரோனா தாக்கம் என பல காரணிகள் இந்திய பங்குச்சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து 81.53 ரூபாயாக உள்ளது.
மூன்றாவது நாளாக அதானி பங்குகள் வீழ்ச்சி:
அதானி டோட்டல் கேஸ் மற்றும் டிரான்ஸ்மிஷன் நிறுவனங்களின் பங்குகள் விலை 20 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை மூன்றாவது நாளாக கடும் சரிவடைந்துள்ளது.
இந்த வார தொடக்கத்தில் உலகின் டாப் 3 பணக்காரர்களில் ஒருவராக இருந்த இந்தியாவின் கவுதம் அதானி, பங்குச்சந்தையில் ஏற்பட்ட தடாலடி வீழ்ச்சியின் காரணமாக, உலக மெகா கோடீஸ்வரர்கள் வரிசையில் 7-ம் இடத்திற்கு மாறியுள்ளார். சரியான மதிப்பீடு இல்லாவிட்டாலும், கிட்டத்தட்ட பல லட்சம் கோடி ரூபாய் இழப்பு சில தினங்களிலேயே அவரது சொத்துமதிப்பில் ஏற்பட்டுள்ளது என ஃபோர்ப்ஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
இதனால், தற்போது உலக மெகா கோடீஸ்வர்கள் வரிசையில் தற்போது 7-ம் இடத்திற்கு அதானி வந்திருந்தாலும், இன்னமும் அவர்தான் ஆசியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர் என்பது குறிப்பிடத்தக்கது. போர்ப்ஸ் பத்திரிகையின் தற்போதைய நிலவரப்படி, உலக மெகா கோடீஸ்வரர்கள் வரிசையில், முதல் இடத்தில் பிரான்சை சேர்ந்த தொழிலதிபர் பெர்னார்ட் ஆர்னார்ட்டும், 2-ம் இடத்தில் எலான் மஸ்க்கும், 3-ம் இடத்தில் ஜெப் பெசாஸும் உள்ளனர். அவர்களுக்கு அடுத்த படியாக, தொழில் அதிபர்கள் லேரி எல்லீசன், வேரன் பப்பட், பில் கேட்ஸ் ஆகியோர் உள்ளனர். அதானி 7-ம் இடத்திலும், இந்தியாவின் மற்றொரு மெகா கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி, 11ம் இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.