நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமான வாழ்வே அனைவரின் பெரும் ஆசையாக இருக்கும். ஆனால், அதற்கேற்ற பயணத்தில் நாம் இருக்கிறோமா என்றால் அதற்கு பலரிடம் பதில் இருக்காது. ஆனால், வயதாக வயதாக உடலில் மாற்றங்கள் ஏற்படும். அதை கவனித்து அதற்கேற்றவாறு நாம் உணவுப் பழக்கம் உள்ளிட்ட வாழ்வியல் முறைகளை மாற்றியாக வேண்டும். 30 வயதை நெருங்குவோர் மற்றும் 30 வயதானோர் தங்களை உருவாக்கி கொள்ள முடியும் என்கிறது மருத்துவ உலகம்.


உடல் மற்றும் மன நலனில் கவனம் செலுத்துவதின் முக்கியத்துவத்தை மருத்துவர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள் எடுத்துரைக்கின்றனர். இந்தக் காலத்தில் உடல் ஆரோக்கியம் பேணுவது மிகவும் அவசியமாகிறது.இது தொடர்பாக நிபுணர்கள், சில வாழ்க்கை முறை மாற்றங்களைக் குறிப்பிடுகிறார், இது உங்கள் 30-களில் நீங்கள் உங்கள் வாழ்க்கையை எப்படி எடுத்துச் செல்ல விரும்புகிறீர்கள் என்பதைத் தீர்மானிக்கும்.  


30 வயதிற்கு பிறகு உடலில் கொழுப்பின் அளவு சீராக அதிகரிக்க தொடங்குகிறது. அதற்கேற்றவாறு உணவுகளை எடுத்துகொளவது உகந்தது. இது ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். முக்கிய விஷயம் என்னவென்றால், உங்கள் உணவை கட்டுப்படுத்தக்கூடாது, மிதமாகச் சாப்பிடுங்கள். ஆரோக்கியமான உணவு என்பது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, உங்கள் மன ஆரோக்கியத்திற்கும் உதவும் கலவையாகும்.


உடலினை உறுதிசெய்:


உடலின் தசைகள் வலுவாக இருக்க தொடர்ந்து உடற்பயிற்சி அவசியமாகிறது. அதுவும் 30-களில் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். இதற்கு கார்டியோ, வாக்கிங் உள்ளிட்டவைகள் செய்து உடல் ஆரோக்கியத்தினைப் பாதுகாக்கலாம். 



வோர்க் அவுட்- முறையில் மாற்றங்கள்: 


உடற்பயிற்சி செய்வது ஒரு கலை. தனிப்பட்ட நபருக்கு ஏற்றவாறு அது மாறுபடும். ஆனால், 30-களில் ஒரேமாதிரியான உடற்பயிற்சி முறைகள் கைகொடுக்காது. அதனால், உடற்பயிற்சி முறைகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றலாம். தினமும் ஒரே உடற்பயிற்சியை செய்ய வேண்டாமே.



போஸ்ட்-வோர்க் அவுட் டயட்: 


உணவுப் பழக்கம் எப்படி இருக்கிறது என்று கவனிக்க வேண்டும். உடற்பயிற்சிக்கு பிறகு என்ன உட்கொள்கிறோம் என்று என்பது முக்கியம். புரோட்டீன் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். உடலுக்கு எனர்ஜி அளிக்க கூடியவைகளை சாப்பிடலாம். 


தண்ணீர் குடிப்பது முக்கியம்: 


நமக்கு தேவையான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியமானதாகும். காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதை பழக்கப்படுத்தலாம். போதிய அளவு தண்ணீர் குடிக்கவில்லையென்றால் உடலில் வளர்ச்சிதை மாற்றம் பாதிக்கப்படும். எனவே, நினைவில் கொள்ளுங்கள். தண்ணீர் குடிப்பது அவசியமென்று. 


யோகா: 


உடல்நலனோடு மனதை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான வழி யோகா. மனச்சோர்வு, மன அழுத்தம் ஆகியவற்றை கையாள மிகவும் உதவியாக இருப்பது யோகா. தினமும் யோகா செய்வதை வழக்கமாக்கிகொள்ள வேண்டும். 


 உட்கார்ந்திருப்பது புகைப்பிடித்தலுக்குச் சமம்:


நீங்கள் நாள் முழுவதும் உங்கள் மேசையில் சிக்கிக்கொண்டால், அவ்வப்போது எழுந்து அங்கும் இங்கும் நகர்வது கட்டாயமாகும். டிஜிட்டல் வாட்ச்கள் மற்றும் ஃபிட்னஸ் பேண்டுகள் உங்கள் தினசரி இயக்க இலக்கை நிறைவுசெய்வதை உறுதி செய்வதற்கான சிறந்த வழியாகும். மேலும் உங்கள் தினசரி வழக்கத்தில் உடற்பயிற்சி செய்வதில் ஈடுபடுவதற்கு நீங்கள் போதுமான உந்துதல் பெறவில்லை என்று  உணர்ந்தால், தினமும் ஒரு மணிநேரம் உங்களுக்குப் பிடித்தமான செயல்களைச் செய்ய வேண்டும், அது ஜாகிங், ஓட்டம், டென்னிஸ் அல்லது கால்பந்து விளையாடுவது என எதுவாகவும் இருக்கலாம்.


 தூக்கம்


போதுமான அளவு விவாதிக்கப்படாத மிக முக்கியமான உடற்பயிற்சி பழக்கங்களில் ஒன்று ஆரோக்கியமான இரவு தூக்கத்தின் முக்கியத்துவம். சிறந்த முறையில் செயல்பட, உங்கள் உடல் உகந்த ஆரோக்கியத்தைத் தக்கவைக்க குறைந்தபட்சம் 7 முதல் 8 மணிநேர தூக்கம் தேவைப்படுகிறது. நல்ல தூக்கம் உங்கள் மூளையின் செயல்திறன், ஆரோக்கியம் மற்றும் மனநிலையை மேம்படுத்துவது மட்டுமல்ல. மேலும், தரமான தூக்கத்தைப் பெறாதது இதய நோய்கள், பக்கவாதம், டிமென்ஷியா மற்றும் உடல் பருமன் வரை எண்ணற்ற கோளாறுகளின் அபாயத்தை கட்டுப்படுத்துகிறது.


ஹேப்பி 30’ஸ் மக்களே!