Share Market opened : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது ஏற்றத்தில் தொடங்கியுள்ளது.


மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 181.58புள்ளிகள் உயர்ந்து 61,123.25 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 48.60 புள்ளிகள் உயர்ந்து 18,167.15 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது. இந்த வாரத்தில் இரண்டாவது நாளாக இந்திய பங்குச்சந்தையானது ஏற்றத்தில் தொடங்கியதால் முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


லாபம்-நஷ்டம்


டாடா மோட்டார்ஸ், ஏசியன் பையின்ட்ஸ, பிபிசிஎல், பஜாஜ் பின்சர்வ், இன்போசிஸ், எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, டெக் மகேந்திரா, எச்டிஎஃப்சி லைப், மாருதி சுசிகி, ஓஎன்ஜிசி, ஹின்டல்கோ, லார்சன், அதாணி எட்டர்பிரிஸ், ஐடிசி, எச்எல் டெக், சிப்ளா, பஜாஜ் ஆட்டோ, என்டிபிசி, ரிலையன்ஸ், டிசிஎஸ், டெட்டன் கம்பெணி, விப்ரோ, எம்எம், பிரிட்டானியா, சன் பார்மா, அல்ட்ரா டெக் சிமெண்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.


பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய வங்கிகளானது தொடர்ந்து வட்டி விகிதத்தை அதிகரித்து வருகின்றன. ரஷ்யா-உக்ரைன் போர் 11 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், இதுவும் பங்குச்சந்தைகளில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.


இதுமட்டுமின்றி, சீனா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தாக்கமானது அதிகரித்து வருகிறது.  இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.  பாரதி ஏர்டெல், சன் பார்மா, கோடக் மகேந்திரா, நெஸ்டிலே, அப்போலோ மருத்துவமனை, கோல் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன. இதுபோன்ற சாதகமான போக்கு இல்லாமல் இருந்தாலும்  இந்திய பங்குச்சந்தையானது இன்று ஏற்றத்தில் தொடங்கியுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.