அஸீமின் வெற்றி சமுதாயத்துக்கு ஒரு மோசமான முன் உதாரணம் என்பதை வழிமொழிந்து சக பிக் பாஸ் போட்டியாளர் மகேஸ்வரி பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.


சென்ற ஆண்டு  அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கிய பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் மொத்தமாக 21 போட்டியாளர்கள் பங்குபெற்றனர். 


இந்நிகழ்ச்சியில் மைனா, ரச்சிதா, ஷெரின், குயின்சி, நிவாஸினி, ஜனனி, ஆயிஷா என மெஜாரிட்டி பெண் போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில், அவர்களில் தொடக்கம் முதலே ஸ்ட்ராங்கான போட்டியாளராக விஜே மகேஸ்வரி கருதப்பட்டார்.


நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அசீமுடன் நல்ல நட்பு பாராட்டியே வந்த மகேஸ்வரி, இரண்டு வாரங்களுக்குப் பின் அசீம் பிற போட்டியாளர்களை டாமினேட் செய்வதாக வெளிப்படையாக தெரிவித்ததுடன் அவருடன் முட்டி மோதி விளையாடவும் தொடங்கினார். மேலும் விக்ரமனுடனும் கருத்து வேறுபாடுகள், சண்டைகள் தாண்டி நட்பு பாராட்டி வந்தார்.


இந்நிலையில், ஜி.பி.முத்து தானாக முன்வந்து வெளியேற சாந்தி, அசல் கோலார், ஷெரின் சாம் ஆகியோரின் வரிசையில் விஜே மகேஸ்வரி 4ஆவது வார இறுதியில் வெளியேறினார். அவரது வெளியேற்றம் அன்ஃபேர் எவிக்‌ஷன் என்றும், ஸ்ட்ராங்கான போட்டியாளரான மகேஸ்வரி விளையாட்டில் இன்னும் சில வாரங்கள் நீடித்திருக்க  வேண்டும் என்றும் பிக் பாஸ் ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வந்தனர்.


இந்நிலையில், முன்னதாக இறுதி வாரம் எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கு வருகை தந்தபோது அவர்களுடன் வந்த மகேஸ்வரிக்கும் அஸீமுக்கும் மீண்டும் முட்டல் மோதல் வெடித்தது. 


இந்நிலையில் 105 நாள்களைக் கடந்து நேற்றைய தினம் பிக் பாஸ் அதன் இறுதிகட்டத்தை அடைந்ததுடன் அசீம் டைட்டில் வின்னராகவும் அறிவிக்கப்பட்டார். ஷிவின், விக்ரமன் ஆகிய பிற இரண்டு போட்டியாளர்களும் பிக் பாஸ் டைட்டிலுக்கு மிகவும் தகுதியுடையவர்கள் என ஏற்கெனவே சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், திடீர் திருப்பமாக அசீம் வெற்றி பெற்றது நெட்டிசன்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.


பிக் பாஸில் ஆரம்பம் முதலே கட்டுப்பாடின்றி கோபத்தை வெளிப்படுத்தி, வாராவாரம் கமல் அறிவுரை சொல்லுமளவுக்கு நெகட்டிவ் இமேஜை முன்னிறுத்தி விளையாடி வந்த அஸீம் டைட்டில் வென்றது நெட்டிசன்களின் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.


பிக் பாஸில் வரலாற்றுப் பிழை, பாய்காட் விஜய் டிவி, தீமை தான் வெல்லும் என்றெல்லாம் நேற்று மாலை முதலே தங்கள் அதிருப்தியை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி பொங்கித் தீர்த்தனர்.




 
இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டிலை அஸீம் வென்றது எப்படி ஒரு மோசமான முன்னுதாரணம் எனும் தனியார் சேனலின் கட்டுரை ஒன்றை பகிர்ந்து தன் எதிர்ப்பை பகிர்ந்துள்ளார்.


 






மகேஸ்வரியின் இந்தப் பதிவை நெட்டிசன்கள் அதிகம் ஷேர் செய்து வருவதுடன், அசீமின் பெரும் ரசிகர் பட்டாளத்துக்கு எதிராகவும், சமூகத்தை கருத்தில் கொண்டும் மகேஸ்வரி துணிவுடன் இதனைப் பகிர்ந்துள்ளார் என்றும் மகேஸ்வரியை பாராட்டி வருகின்றனர்.