Share Market opened : இந்திய பங்குச்சந்தை இன்று காலை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது.


இந்த ஆண்டின் முதல் வர்த்தக தினமான திட்கட்கிழமை இந்திய பங்குச் சந்தையானது ஏற்றத்தில் தொடங்கியுள்ளது. இதை அடுத்து,  மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 123.53  புள்ளிகள் உயர்ந்து 60,964.27 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 47.9 புள்ளிகள் உயர்ந்து 18,153.20 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது. 






2022ல் இந்திய பங்குச்சந்தை நிலை?


2022ஆம் ஆண்டில் இந்திய பங்குச்சந்தை குறியீடு எண்கள் சென்செக்ஸ் மற்றும் நிப்ஃடி தலா 4 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தது. முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.16.45 லட்சம் கோடி லாபம் கிடைத்ததாக கூறப்படுகிறது. அதன்படி கடந்த ஆண்டில் ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 4.4 சதவீதமும், தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிப்ஃடி 4.3 சதவீதமும் உயர்ந்துள்ளதாக தரவுகள் வெளியாகி உள்ளது.


உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு, கச்சா எண்ணெய் விலை உயர்வு, நாட்டில் சில்லறை விலை பணவீக்கம் பல மாதங்களாக உயர்ந்து இருந்தது,  அமெரிக்க பெடரல் வங்கயின் வட்டி உயர்வு, உலக பொருளாதார மந்தநிலை குறித்த பயம், அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளில் மேற்கொண்டு இருந்த முதலீட்டை திரும்ப பெற தொடங்கியது, மீண்டும் சீனாவில்  அதிகரித்த கொரோனா பாதிப்பபு போன்ற பாதகமான அம்சங்கள் நிலவிய போதிலும், 2022ல் இந்திய பங்குச்சந்தையின் வர்த்தகம் சிறப்பாக இருந்ததாக கூறப்படுகிறது.


இந்நிலையில், இந்த ஆண்டின் முதல் வர்த்தக தினமான இன்று பங்குச்சந்தை ஏற்றத்தில் தொடங்கியுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


லாபம் - நஷ்டம்


டாடா ஸ்டீல், ஹின்டல்கோ, டாடா மோட்டார்ஸ், பிரிட்டானியா, ஐசிஐசிஐ வங்கி, ரிலையன்ஸ், ஓன்ஜிசி, பிபிசிஎல்,  பாரதி ஏர்டெல், ஆக்சிஸ் வங்கி, என்டிபிசி, பாரதி ஏர்டெல், மாருதி சுசிகி, எஸ்பிஐ, அல்ட்ரா டெக் சிமெண்ட்,  எஸ்பிஐ, கிராசிம், இன்போசிஸ், கோல் இந்தியா, நெஸ்டீலே உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.


பஜாஜ் ஆட்டோ, சன் பார்மா, பஜாஜ் பின்சர்வ், சிப்ளா, எச்டிஎஃப்சி லைப்,  அப்போலா மருத்துவமனை, ஐடிசி, லார்சன், டெக் மகேந்திரா, யுபிஎல், எச்டிஎஃப்சி வங்கி,  டெட்டன் கம்பெணி, விப்ரோ, எம்எம், டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.


ரூபாயின் மதிப்பு




இன்று காலை தொடங்கிய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பானது 5 காசுகள் குறைந்து 82.66 ரூபாயாக உள்ளது.