ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் சோமு நகரை சேர்ந்த சிலர் சொகுசு கார் ஒன்றில் அதிவேகமாக கண்டேலா பகுதியை நோக்கி சென்றுள்ளது.
அப்போது, அந்த சொகுசு கார் பல்சானா- கண்டேலா தேசிய நெடுஞ்சாலையில் மாஜி சாஹப் கி தானி என்ற இடத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்தது. காரை ஓட்டிவந்த ஓட்டுனர் காரை கட்டுப்படுத்த முயற்சித்தும், கார் கட்டுப்பாட்டை இழந்து, முதலில் எதிரே வந்த பைக் மீது மோதியது. தொடர்ந்து வேகமாக வந்த லாரி மீதும் மோதி விபத்துகுள்ளானது.
இந்த விபத்தில் ஒன்றரை வயது கைக்குழந்தையுடன் பைக்கில் சென்ற தம்பதியினர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், காரில் பயணித்த 7 பேர் உள்பட மொத்தமாக 10 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போதும் சிகிச்சையின்போதும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்து அருகிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.
விபத்து குறித்து நெடுஞ்சாலை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அப்பகுதி மக்களுடன் துரிதமான செயல்பட்டு விபத்துகுள்ளானவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து காவல்துறையினர் தற்போது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்:
ராஜஸ்தான் மாநிலம் ஹனுமங்கர் சாலையில் மற்றொரு கொடூர சாலை விபத்து ஒன்று நிழந்துள்ளது. இதிலும் கார் மற்றும் லாரி நேருக்குநேர் மோதிக்கொண்டத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், ஒருவர் பலத்த காயமடைந்து பிகானரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லாரி டிரைவர் தப்பியோட்டம்:
ஹனுமன்கர் மெகா நெடுஞ்சாலையில் உள்ள பிஸ்ராசர் கிராமத்தில் காரும் லாரியும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில், விபத்து முக்கிய காரணமாக இருந்த லாடி டிரைவர் தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.
இந்த விபத்தானது ராவத்சர்- சர்தர்ஷாஹர் நெடுஞ்சாலையில் பிஸ்ராசர் கிராமத்திற்கு அருகே சனிக்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மேலும் இருவர் உள்ளூர் மருத்துவமனையில் உயிரிழந்ததாக பல்லு காவல் நிலைய பொறுப்பாளர் கோபி ராம் தெரிவித்தார்.
இறந்தவர்கள் ராஜூ மேக்வால், நரேஷ் குமார், தனராம், பப்லு மற்றும் முரளி சர்மா என அடையாளம் காணப்பட்டதாக கூறப்படுகிறது.