Share Market opened : இந்திய பங்குச்சந்தை இன்று காலை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது.


 இந்திய பங்கு சந்தை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தமாகி வருகிறது. மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 36.93புள்ளிகள் உயர்ந்து 60,694.38 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 18.85 புள்ளிகள் உயர்ந்து 18,061.80 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது. இந்திய பங்குச்சந்தையாது இரண்டு நாட்கள் சரிவுக்கு பிறகு, இன்று ஏற்றத்துடன் தொடங்கி உள்ளதால் முதலீட்டாளர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.


லாபம்-நஷ்டம்


பிரட்டானியா, எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, சன்பார்மா, டாடா கான்ஸ், ஐடிசி, என்டிபிசி, எச்டிஎஃப்சி லைப், ஹிரோ மோட்டாகோர்ப், நெஸ்டீலே, சிப்ளா, எச்சிஎல் டெக், யுபிஎல், பாரதி ஏர்டெல், லார்சன், ஹின்டல்கோ, எச்சிஎல் டெக், டெட்டன் கம்பெணி, டிசிஎஸ், ரிலையன்ஸ், கிராசிம், எம்எம் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.


பஜாஜ் பின்சர்வ், கோல் இந்தியா, ஆக்சிஸ் வங்கி, பவர் கிரிட்கார்ப், அப்போலா மருத்துவமனை, இன்போசிஸ், ஐசிஐசிஐ வங்கி, மாருதி சுசிகி, டாடா ஸ்டீல், அல்ட்ரா டெக் சிமெண்ட், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.


முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி


கடந்த இரண்டு நாட்களாகவே பங்குச்சந்தையானது மந்தமாக இருந்து வந்தது. இதை தொடர்ந்து இன்றைய வர்த்தம் முதலீட்டாளர்களை சற்று ஆறுதல் அடைய வைத்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு, கச்சா எண்ணெய் விலை உயர்வு, நாட்டில் சில்லறை விலை பணவீக்கம் பல மாதங்களாக உயர்ந்து இருந்தது,  உலக பொருளாதார மந்தநிலை குறித்த பயம்,  மீண்டும் சீனாவில்  அதிகரித்த கொரோனா பாதிப்பபு போன்ற பாதகமான சூழல்கள் இருந்தும் பங்குச்சந்தையானது இன்று ஏற்றத்தில் தொடங்கியுள்ளது.