Share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது சரிவில் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.


மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 47.71 அல்லது  0.08% புள்ளிகள் குறைந்து 59,697.27 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 15.45 அல்லது 0.09% புள்ளிகள் குறைந்து 17,538.85 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது.  இந்த வாரத்தில் பங்குச்சந்தையானது சரிவுடன் இருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.


லாபம் - நஷ்டம்


கோல் இந்தியா, பிபிசிஎல், டாடாஸ்டீல், டிசிஎஸ், டெக் மகேந்திரா, ஹின்டல்கோ, விப்ரோ, ஐடிசி, லார்சன், கோடக் மகேந்திரா, கிராசிம், ஐடிசி, அல்ட்ரா டெக் சிமெண்ட், இன்போசிஸ், பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.


அதானி போர்ட்ஸ், பஜாஜ் பின்சர்வ், டெட்டன் கம்பெணி, எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கி, என்டிபிசி, பிரிட்டானியா, ஏசியன் பையின்ட்ஸ், எம்எம், எஸ்பிஐ, மாருதி சுசிகி, டாடா மோட்டார்ஸ், நெஸ்டீலே, கிராசிம், பாரதி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.


காரணம்


அமெரிக்காவில் பணவீக்கம் குறைந்தபாடில்லாமல் இருப்பதால் அந்நாட்டு பெடரல் ரிசர்வ் வட்டி வட்டிவீகிதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க பொருளாதாரத்தின் எதிர்மறையான போக்கு முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும், உக்ரைன் ரஷ்யா போர் மீண்டும் உருவாவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா இடையிலான அணு ஆயுத ஒப்பந்தத்தை ரஷ்ய அதிபர் புதின் ரத்து செய்ததும் பங்குச்சந்தையில் கொந்தளிப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் கச்சா எண்ணெய் விலை, உணவுப் பொருட்கள் விலை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் முதலீட்டளர்களுக்கு எழுந்துள்ளது.  இதனை அடுத்து அதானி குழுமத்தின் பங்குகளும் ஒரு மாதமாக சரிந்து வருவதும் இந்திய பங்குச்சந்தையில் எதிரொலித்ததாக தெரிகிறது.


நடப்பாண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு 15 சதவீதம் இருக்கும் என்று சர்வதேச நிதியத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். உலகில் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி  விகிதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 3.4 சதவீதத்திலிருந்து 2.9 சதவீதமா குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தை சரிவில் இருப்பதாக கூறப்படுகிறது. 


ரூபாய் மதிப்பு:




அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து 82.77 ஆக  உள்ளது.