புனே நீண்ட காலமாகப் பாதிக்கப்படுவது போக்குவரத்து பிரச்சினையால்தான். கடந்த சில ஆண்டுகளாக நடந்து வரும் வளர்ச்சி நடவடிக்கைகள், குறிப்பாக மெட்ரோ பணிகள் காரணமாக இந்நிலைமை மோசமடைந்துள்ளது.
தி டாம்டாம் போக்குவரத்து தரவரிசைப் பட்டியலில் புனே நகரம் 56 நாடுகளிலுள்ள 389 நகரங்களுள், ஆறாவது நகரமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. புனேவை நீண்ட காலமாக பாதிக்கும் ஒரு பிரச்சனை போக்குவரத்து நெரிசல் அகும். கடந்த சில ஆண்டுகளாக நடந்து வரும் வளர்ச்சி நடவடிக்கைகள், குறிப்பாக மெட்ரோ பணிகள் காரணமாக இந்நிலைமை மோசமடைந்துள்ளது. டாம்டாம் போக்குவரத்து தரவரிசை 2022 இன் படி, புனேவில் ஒரு பயணி 10 கிமீ தூரத்தை கடக்க, சராசரியாக 27 நிமிடங்கள் மற்றும் 20 வினாடிகள் வேண்டும். இது 2021 இல் எடுத்ததை விட 1 நிமிடம் 10 வினாடிகள் அதிகம்.
கணக்கெடுப்பின்படி, வாரத்தின் மிக மோசமான போக்குவரத்து நெரிசல் வெள்ளிக்கிழமைகளில் மாலை 6 மணி முதல் 7 மணி வரை காணப்படுகிறது. ஒரு பயணி 10 கிமீ தூரத்தை கடக்க 35 நிமிடங்கள் 50 வினாடிகள் ஆகும். சராசரியாக, புனேவில் ஒரு பயணி 249 மணிநேரம் வாகனம் ஓட்டுகிறார், அதில் 121 மணிநேரம் நெரிசல் காரணமாக, தினசரி 10 கிமீ பயணத்திற்காக செலவிடப்படுகிறது என்று இவ்வறிக்கை மேலும் காட்டுகிறது.
அது மட்டுமல்லாது ஒரு நாளைக்கு 10 கிமீ பயணிப்பதன் மூலம் ஒரு நபர் 1.001 கிலோ கார்பன் டை ஆக்ஸைடு எமிட் செய்கிறார். இதில் 256 கிலோகிராம் போக்குவரத்து நெரிசலால் உருவாகிறது. இந்த போக்குவரத்து நெரிசல் தான் காற்று மாசு அதிகரிக்க மிக முக்கியமான காரணமாகக் கருதப்படுகிறது. 2022 புனே வட்டார போக்குவரத்து அலுவலகம் 43.4 லட்சம் வாகனங்களை பதிவு செய்துள்ளது.
தி டாம் டாம் போக்குவரத்து தரவரிசைப் பட்டியலானது 389 நகரங்களில் ஆய்வு செய்ததன் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. 6 கண்டங்களில் உள்ள 56 நாடுகளில் 389 நகரங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் புனே 6வது இடத்திலும், பெங்களூரு 2ஆம் இடத்திலும் உள்ளன. புதுடெல்லி மற்றும் மும்பை முறையே 34 மற்றும் 47வது இடங்களில் உள்ளன. போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள நகரங்களில் பெங்களூரு உலகிலேயே இரண்டாவது இடத்தில் உள்ளது.