Share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது ஏற்றத்தில் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.
மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 112.16 அல்லது 0.18% புள்ளிகள் உயர்ந்து 60,803.70 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 32.45 அல்லது 0.18% புள்ளிகள் உயர்ந்து 17,877.05 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது. இந்த வாரத் தொடக்கத்தில் இருந்தே பங்குச்சந்தையானது ஏற்றத்தில் தொடங்குது முதலீட்டாளர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.
லாபம்-நஷ்டம்
என்டிபிசி, அதானி போர்ட்ஸ், எச்டிஎஃப்சி, ஹின்டல்கோ, சிப்ளா, ஹிரோ மோட்டோ கோர்ப், எம்எம், டாடா கான்ஸ், டாடா மோட்டார்ஸ், பவர்கிரிட் கார்ப், ஏசியன் பையின்ட்ஸ், கோடக் மகேந்திரா, சிப்ளா, ரிலையன்ஸ், ஐடிசி, சன் பார்மா, பாரதி ஏர்டெல், டெட்டன் கம்பெணி, பிபிசிஎல், பஜாஜ் பின்சர்வ், இன்போசிஸ், டிசிஎஸ், லார்சன், நெஸ்டீலே, விப்ரோ, மாருதி சுசிகி, டெக் மகேந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஆட்டோ, மாருதி சுசிக உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.
பணவீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி அடுத்த மாதத்தில் கூட்டத்தை நடத்த உள்ளது. இந்த கூட்டத்தில் பணவீக்கத்தை நீண்ட காலத்துக்கு கட்டுப்படுத்தும் விதமாக, அமெரிக்க மத்திய வங்கியானது, வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்த வாய்ப்புள்ளதாக பங்கு சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்ய பலரும் தயங்குவதாலும், பலரும் தங்கள் முதலீடு செய்த பங்குகளில் இருந்து வெளியேறி, வெளிநாடுகளில் முதலீடு செய்து வருவதாலும் இந்திய பங்குச்சந்தை மந்தமாகவே உள்ளதாக கூறப்படுகிறது.
ரூபாய் மதிப்பு:
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் குறைந்து 82.76 ஆக உள்ளது.