Share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது ஏற்றத்தில் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.
மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 379.15 அல்லது 0.51 % புள்ளிகள் உயர்ந்து 61,654.24 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 108.25 அல்லது 0.48% புள்ளிகள் உயர்ந்து 18,124.10 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது. இந்த வாரத்தில் மூன்று நாட்களிலும் இந்திய பங்குச்சந்தையானது ஏற்றத்தில் இருந்தது. இந்நிலையில் இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் பங்குசந்தை ஏற்றத்தில் தொடங்கியது முதலீட்டளார்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லாபம்-நஷ்டம்
டெக் மகேந்திரா, ஓஎன்ஜிசி, அப்போலோ மருத்துவமனை, லார்சன், ரிலையன்ஸ், டாடா ஸ்டீல், அதானி போர்ட்ஸ், டாடா மோட்டார்ஸ், ஹின்டல்கோ, சன் பார்மா, எம்எம், எச்டிஎஃப்சி, பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் பைனான்ஸ், எஸ்பிஐ, பஜாஜ் ஆட்டோ, ஐசிஐசிஐ வங்கி, விப்ரோ, ஆக்சிஸ் வங்கி, டிசிஎஸ், நெஸ்டீலே, ஐடிசி, பிபிசிஎல், கோல் இந்தியா, பிரட்டானியா, கிராசிம் உள்ளிட்ட நிறுவனங்களில் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.‘
யுபிஎல், அல்ட்ரா டெக் சிமெண்ட், கிராசிம் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.
ஏற்றத்தில் பங்குச்சந்தை
அமெரிக்காவில் பணவீக்கம் நிலவி வரும் நிலையில், முதலீட்டாளர்கள் உள்நாட்டு சந்தையில் கவனம் செலுத்தியதன் காரணமாக, இந்திய பங்கு சந்தை உயர்ந்ததாக பங்கு சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதன்படி, நேற்றைய வர்த்தக முடிவில், நிஃப்டியானது 18 ஆயிரத்தை தொட்டது. ஜனவரி 25ஆம் தேதியில் இருந்து நிஃப்டி புள்ளிகள் சரிவுடனே இருந்தன. இதனால் கடந்த சில நாட்களாகவே முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடம் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தனர். புதிதாக பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டாமல், லாபம் ஈட்டுவதிலேயே ஆர்வத்தை செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக பங்குச்சந்தையில் நிப்ஃடி புள்ளிகள் நேற்று 18 ஆயிரத்தை தொட்டது முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதனை தொடர்ந்து இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்து 61,590.62 ஆகவும், நிஃப்டி 86 புள்ளிகள் உயர்ந்து 18,101 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது.
ரூபாயின் மதிப்பு
இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து 82.66 ரூபாயாக உள்ளது