Share Market opened : இந்திய பங்குச்சந்தை இன்று காலை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது.


 இந்திய பங்கு சந்தை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தமாகி வருகிறது. மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 404.21 புள்ளிகள் உயர்ந்து 60,970.63 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 119.45 புள்ளிகள் உயர்ந்து 18,134.05 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது.






லாபம்-நஷ்டம்


டாடா மோட்டார்ஸ், ஓ.என்.ஜி.சி., டாடா ஸ்டீல், என்.டி.பி.சி., அல்ட்ரா டெக் சிமெண்ட், ஹிரோ மோட்டாகோர்ப், பஜாஜ் ஆட்டோ, டெட்டன் கம்பெணி, பஜாஜ் பின்சர்வ், பிபிசிஎல், கோல் இந்தியா, அதாணி போர்ட்ஸ், யுபிஎல், கிராசிம், எச்சிஎல் டெக், விப்ரோ, எஸ்.பி.ஐ., லார்சன், மாருதி சுசிகி, எம்.எம்., ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, நெஸ்டீலே, ரிலையன்ஸ், டி.சி.எஸ்., கோடக் மகேந்திரா, டெக் மகேந்திரா, பிரட்டானியா, சன் பார்மா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.


சன் பார்மா, சிப்ளா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.


முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி


கடந்த வாரத்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக சரிவில் இருந்து இந்திய பங்குச்சந்தை, இந்த வாரத்தில் இரண்டு நாட்களும் ஏற்றத்தில் தொடங்கியுள்ளன. சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை 2023-ஆம் ஆண்டில் உருவாகும், அமெரிக்காவுக்கும் 2023-ஆம் ஆண்டில் பொருளாதார மந்தநிலையை நோக்கி நகர்கிறது என்ற தகவலும் முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியிருந்து. மேலும் சீனாவில் கொரோனா வரலாறு காணாத அளவில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையிலும் பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்குவதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


ரூபாய் மதிப்பு






இந்நிலையில், இன்று காலை தொடங்கிய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பானது 8 காசுகள் குறைந்து 82.73 ரூபாயாக உள்ளது.