தமிழ்நாடு:



  • சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

  • தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்: மருத்துவக்கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தல்

  • 2023ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர்: ஜனவரி 9ம் தேதி பேரவை தொடங்குகிறது- சபாநாயகர் அப்பாவு தகவல்

  • விடுமுறை முடிந்து சென்னை வரும் பயணிகளிடம் 3 மடங்கு கட்டணம் வசூல்: ஆம்னி பஸ் கொள்ளையால் பொதுமக்கள் அதிர்ச்சி

  • அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை

  • நவீன முறையை பயன்படுத்தி நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க வேண்டும்: அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவு

  • தமிழ்நாட்டில், கொரோனா தொற்று தொடர்பான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என அரசு மருத்துவமனைகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவு

  • சாதி, வருவாய் தொடர்பான சான்றிதழ்களை பயனாளர்களுக்கு தாமதமின்றி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

  • தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 29 ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 


இந்தியா:



  • ஜிஎஸ்டியில் உரிய இழப்பீடு கோரியும் செஸ் வரியை காரணம் காட்டி மறுக்கப்படும் மாநில பங்களிப்பு: சிஏஜி அறிக்கையால் அம்பலமான பகீர் தகவல்

  • வங்கி ‘லாக்கரை’ புதுப்பிக்க ஜனவரி 1ம் தேதி வரை கெடு: புதிய விதிகளை வெளியிட்டது ரிசர்வ் வங்கி 

  • இந்திய ராணுவத்தை ராகுல் சிறுமைப்படுத்த வேண்டாம்- மத்திய அமைச்சர் கடும் தாக்கு

  • வைரஸ் காய்ச்சலால் பாதிப்பு : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மருத்துவமனையில் அட்மிட் 

  • உலக நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கர்நாடகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

  • சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டுள்ளார்.." பிரேத பரிசோதனை அறை ஊழியர் அதிர்ச்சி தகவல்

  • குளிர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் டெல்லியில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக டெல்லி கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.


உலகம்:



  • தென்கொரியாவில் முதன்முறையாக மூளையை உண்ணும் அமீபாவால் ஒரு நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • உக்ரைனின் பாதுகாப்பு படையின் வலிமையை மேம்படுத்துவதற்காக ரூ.1.8 பில்லியன் டாலர் ஆயுத உதவிகளை அமெரிக்க அறிவித்தது. 

  • அமெரிக்காவை நிலைகுலையச் செய்த பனிப்புயலால் 31 பேர் உயிரிழப்பு.

  • நேபாளத்தின் நாட்டின் புதிய பிரதமராக பிரசாந்தா மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ளார்.


விளையாட்டு:



  • 2023ல் இந்தியாவில் நடக்கவுள்ள இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் ரோகித் ஷர்மா மற்றும் கே. எல். ராகுலுக்கு இந்திய அணியில் இடம் இல்லை என தகவல் 

  • டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணிக்காக அதிக தொடர்நாயகன் விருதுகளை வென்ற வீரர் என்ற சச்சினின் சாதனையை தமிழக வீரர் அஸ்வின் நெருங்கியுள்ளார்.

  • 2022ம் ஆண்டு அனைத்து பார்மேட்களையும் சேர்த்து இந்தியாவுக்காக அதிக ரன்கள் சேர்த்தவர்கள் பட்டியலில் ஷ்ரேயஸ் ஐயர் முதலிடத்தில் உள்ளார்.

  • ஐந்து பேர் கொண்ட இந்திய அணி தேர்வுக் குழுவிற்கு MS தோனி, வீரேந்திர சேவாக், சச்சின் டெண்டுல்கர் மற்றும் பாகிஸ்தானின் இன்சமாம் உல் ஹக் ஆகியோரின் பெயர்களில் போலியாக விண்ணப்பங்கள் வந்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.