Share Market: இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளன.


மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 144.61 அல்லது ஒ.23% புள்ளிகள் உயர்ந்து 62,677.91 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 52.30 அல்லது புள்ளிகள் உயர்ந்து 18,660.30 புள்ளிகளாக வர்த்தகமாகியது.





லாபம்-நஷ்டம்


ஹிண்டால்கோ, ஓ.என்.ஜி.சி., டெக் மஹிந்திரா, ஜெ.எஸ்.டபுள்யூ ஸ்டீல், யு.பி.எல்., ஈச்சர் மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், இந்துஸ்லேண்ட் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, பவர் கிரிட் கார்ப், ஹெச்.சி.எல். டெக், டி.சி.எஸ்., ஹெச்.டி.எஃப்.சி., விப்ரோ, சன் ஃபார்மா, இன்ஃபோசிஸ், பஜார்ஜ் ஃபினான்ஸ், கோல் இந்தியா, சிப்லா, கோடாக் மஹிந்திரா, எம். அண்ட் எம். மாருதி சுசூகி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன. 


நெஸ்லே, பாரதி ஏர்டெல், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், ஐ.டி.சி. ரிலையண்ஸ், ஆக்ஸிஸ் வங்கி  உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.


கடந்த வாரம் வட்டி விகித உயர்வு அறிவிப்பு வெளியானது. அதில் வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 0.35 சதவீதமாக இந்திய ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. வட்டி விகிதம் உயர்ந்ததை அடுத்து ரெப்போ வட்டி விகிதம் 5.9 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக அதிகரித்துள்ளது.ரெப்போ வட்டி விகிதம் உயர்வால் தனிநபர், வாகன கடன்களுக்கான வட்டி வகிதம் உயரக்கூடும் என்று கூறப்படுகிறது


இதனால் கடந்த வாரம் முழுவதும் பங்குச்சந்தையானது சரிவில் இருந்தது. வட்டி விகித உயர்வுக்கு பிறகு இன்று தான் பங்குச் சந்தை உயர்ந்தது.