Share Market Closing Bell: இன்றைய நாளின் முடிவில் இந்திய பங்குச்சந்தை சரிவுடன் நிறைவடைந்துள்ளது.
மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 117.33% அல்லது 0.20% புள்ளிகள் உயர்ந்து 59,108 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 40.35 அல்லது 0.23% புள்ளிகள் உயர்ந்து 17,400 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின. இன்றைய காலை வர்த்தகத்தில் இந்திய பங்குச்சந்தை சரிவுடன் காணப்பட்டது. ஆனால் தற்போது வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது முதலீட்டாளர்களை சற்று ஆறுதல் அடைய வைத்துள்ளது.
லாபம்-நஷ்டம்
ஹிரோ மோட்டோகோர்ப், கோல் இந்தியா, பஜாஜ் ஆட்டோ, மாருதி சுசிகி, ஓஎன்ஜிசி, பஜாஜ் பின்சர்வ், யுபிஎல், என்டிபிசி, பாரதி ஏர்டெல், எச்சிஎல் டெக், டாடா கான்ஸ், எம்எம், எச்டிஎஃப்சி லைஃப், ஐசிஐசிஐ வங்கி, டைட்டன் கம்பெணி, ஆக்சிஸ் வங்கி, விப்ரோ, எஸ்பிஐ, கோடக் மகேந்திரா, அல்ட்ரா டெக் சிமெண்ட், லார்சன், பிரிட்டானியா, ரிலையன்ஸ், நெஸ்டிலே, எச்சிஎஃப்சி வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
அப்போலோ மருத்துவமனை, இன்போசிஸ், ஐடிசி, சிப்ளா, ஹின்டல்கோ, பிரிட்டானியா, கிராசிம், சன் பார், டாடா ஸ்டீல், டிசிஎஸ், நெஸ்டீலே உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.
நிதியாண்டுக்கான முதல் நாள் காலை வர்த்தகத்தில் பங்குச்சந்தை சரிவுடன் காணப்பட்டது. உலக அளவில் நிலவும் பணவீக்கம் கடும் நெருக்கடியை உருவாக்கி வரும் நிலையில், ’ஒபெக்' (OPEC) எனப்படும் பெட்ரோலிய பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு சார்பில் சவூதி அரேபியா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தது.
கச்சா எண்ணெய் விலையை கணிசமான அளவு உயர்த்தியுள்ளது. ஒரு நாளைக்கு 1 மில்லியன் பீப்பாய்களுக்கு மேல் உற்பத்தியைக் குறைப்பதாக எடுக்கப்பட்டுள்ள முடிவு பணவீக்கத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்தியா ரிசர்வ வங்கியின் 2 நாள் நாணய கொள்கை கூட்டம் இன்று துவங்கியது. இன்று முதல் 2 நாட்கள் நடைபெறும் கூட்டத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி எடுக்கப்பட்ட முடிவுகள் வெளியாகும்.
இந்த கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் உயர்த்தப்படலாம் என்று எதிபார்க்கப்படுகிறது. அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் அந்நாட்டு பிராந்திய வங்கிகள் திவாலாகும் நிலையிலும் வட்டி விகிதத்தை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.