கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு உற்சவர் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத உத்தரத்தை முன்னிட்டு கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் பல்வேறு சிறப்பு வாகனத்தில் கல்யாண பசுபதீஸ்வரர், அலங்காரவல்லி அம்பிகை உள்ளிட்ட சுவாமிகள் திருவீதி உலா நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை மாப்பிள்ளை அலங்காரத்தில் யானை வாகனத்தில் கல்யாண பசுபதீஸ்வரர் திருவீதி உலா காட்சி அளித்தார். அதை தொடர்ந்து ஆலய மண்டபத்தில் கல்யாண பசுபதீஸ்வரர், அலங்காரவல்லி, சௌந்தரநாயகி உள்ளிட்ட உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அதை தொடர்ந்து ஆலய மண்டபத்தில் சுவாமிகளை கொழுவிருக்க செய்தனர்.
அதைத் தொடர்ந்து ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர், ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உள்ளிட்ட உற்சவர் சுவாமிகள் ஆலயம் வலம் வந்தது தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார் பிரத்தியேக யாக குண்டங்கள் அமைத்து திருக்கல்யாண நிகழ்ச்சியை தொடங்கினார். பின்னர் சுவாமிக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சியும், ஆலாத்தி எடுக்கும் நிகழ்ச்சியும் , நடைபெற்று தொடர்ந்து கங்கணம் கட்டும் நிகழ்ச்சியில் நடைபெற்றது.
பின்னர் மேளதாளங்கள் முழங்க ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர், அலங்காரவல்லி, சௌந்தரனாகி சுவாமிகளுக்கு திருக்கல்யாண வைபோகம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அதை தொடர்ந்து மொய் வைக்கும் நிகழ்ச்சியும், பால்,பழம் வழங்கும் நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது.
ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற பங்குனி மாத திருக்கல்யாண நிகழ்ச்சியை காண கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற திருக்கல்யாண வைபோக நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் யானை வாகனத்தில் மாப்பிள்ளை அலங்காரத்தில் திருவீதி உலா.
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரனாகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத உத்திரத்தை முன்னிட்டு கொடியேற்றத்துடன் திருவிழா நடைபெற்று வருகிறது. மேலும் நாள்தோறும் பல்வேறு வாகனத்தில் உற்சவர் கல்யாண பசுபதீஸ்வரர் மற்றும் அலங்காரவல்லி அம்பிகை திருவீதி உலா காட்சி தருகின்றனர்.
இந்நிலையில், ஆலயத்தில் பங்குனி உத்தர திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடைபெறுவதை ஒட்டி கல்யாண பசுபதீஸ்வரர் அதிகாலை மாப்பிள்ளை அலங்காரத்தில் யானை வாகனத்தில் திரு வீதிஉலா காட்சி அளித்தார். ஆலயத்தில் இருந்து மேல தாளங்கள் முழங்க புறப்பட்டு யானை வாகன திருவீதி உலா முக்கிய வீதியில் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் வந்தடைந்தது.
அதிகாலை யானை வாகனத்தில் வீதி உலாவை காண ஏராளமான பக்தர்கள் தங்களது இல்லத்தில் இருந்து தேங்காய், பழம் பிரசாதம் வைத்து காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய செயல் அலுவலர்கள் மற்றும் நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.