கடந்த வார இறுதியில், இந்திய பங்கு சந்தையானது சரிவுடன் காணப்பட்டது. ஆனால் இன்று தொடங்கிய பங்குச் சந்தையானது, காலையில் ஏற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து இன்றைய நாள் முடிவிலும் இந்திய பங்கு சந்தையானது ஏற்றத்துடன் முடிவடைந்தது.
பங்குச்சந்தை நிலவரம்:
இந்நிலையில், மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 169.51 புள்ளிகள் உயர்ந்து 59,500 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 44.60 புள்ளிகள் உயர்ந்து 17, 648.95 புள்ளிகளாகவும் இன்றைய நாள் முடிவில் வர்த்தகமானது. இந்த வாரத்தின் முதல் நாளில், இந்திய பங்குச்சந்தையானது ஏற்றத்தில் தொடங்கியுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த வார இறுதியில், இந்திய பங்கு சந்தையானது பெரும் சரிவை கண்டது. இந்நிலையில் இந்த வாரத்தின் தொடக்க நாளான இன்று, இந்திய பங்கு சந்தையானது ஏற்றத்துடன் தொடங்கியது.
மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 98.89புள்ளிகள் உயர்ந்து 59,429. 79ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 46.35 புள்ளிகள் உயர்ந்து 17,650.70 புள்ளிகளாகவும் வர்த்தகமானது.
லாபம் - நஷ்டம்:
நிஃப்டியில் ஆசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஃபினான்ஸ், பிரிட்டாணியா, இன்ஃபோசிஸ், மாருதி சுசுகி, ரிலையன்ஸ், சன் ஃபார்மா, டிசிஎஸ், டெக் மகேந்திரா, டைட்டான் நிறுவனம், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் காணப்பட்டன.
எஸ்.பி.ஐ, டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ்,பவர் கிரிட், நெஸ்ட்லே, லார்சன், சிப்லா, ஏர்டெல், பஜாஜ் ஆட்டோ, அப்போலோ மருத்துவமனை உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.
ரூபாயின் மதிப்பு:
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 காசுகள் குறைந்து 81.49 ரூபாயாக உள்ளது.