இன்று மாலை முடிவில் மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 151.60 புள்ளிகள் குறைந்து 61,033.55  ஆக புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 45.80 புள்ளிகள் குறைந்து 18,157 புள்ளிகளாக உள்ளது.






அமெரிக்க இடை தேர்தல் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் முடிவடைந்தததாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இன்று காலை தொடங்கிய மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 173.62 புள்ளிகள் அதிகரித்து 61,3583.77  ஆக புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 56.70 புள்ளிகள் அதிகரித்து 18,259.50 புள்ளிகளாக இருந்தது.


குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு இந்திய பங்குச் சந்தையானது கடந்த (நவ.8) விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் ஏற்றத்துடன் காலையில் தொடங்கி, மாலையில் சரிவுடன் முடிவடைந்தது.


லாபம்-நஷ்டம்:


அதானி போர்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, பிரிட்டாணியா, இன்ஃபோசிஸ்,கோடாக் மகேந்திரா, எஸ்.பி.ஐ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.


டாடா ஸ்டீல், டெக் மகேந்திரா, ரிலையன்ஸ்,சிப்லா, ஆசியன் பெயிண்ட்ஸ், பாரதி ஏர்டெல், அப்போலோ மருத்துவமனை உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டன.


அமெரிக்க இடைத்தேர்தல் முடிவையொட்டி, அங்கு வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.


இந்நிலையில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள், இந்திய பங்கு சந்தையிலிருந்து அமெரிக்காவில் முதலீடு செய்யும் நிலவுவதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்திய பங்கு சந்தை சரிவில் சென்றதாக கூறப்படுகிறது.


உலகளவில் பணவீக்கம் அதிகரித்ததை தொடர்ந்து, மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்துவதாக, அமெரிக்க மத்திய வங்கி, கடந்த சில தினங்களுக்கு முன்பு முடிவு எடுத்தது. இதையடுத்து 75 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டு 4 சதவீதமாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


கச்சா எண்ணெய் மீது தாக்கம்


மேலும், சீனாவில் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கச்சா எண்ணெய் தேவையானது உலகளவில் குறைய வாய்ப்புள்ளதால், கச்சா எண்ணெய்யின் விலை குறையும் சூழல் உள்ளது. 


ரூபாயின் மதிப்பு:






இன்று டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வலுவடையும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில், அமெரிக்கு டாலருக்கு எதிரான, இந்திய ரூபாய் மதிப்பானது 45 காசுகள் அதிகரித்து 81.47ருபாயாக ஆக உள்ளது.


Also Read: Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!