கடநத ஒரு வாரமாக உள்நாட்டு சந்தை இழப்புகளை சந்தித்து வந்த நிலையில், உலகளவில் காணப்படும் சாதகமான சூழலையொட்டி, இந்திய பங்கு சந்தை ஏற்றத்துடன் காணப்படுகிறது.


இந்நிலையில் மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 361.01 புள்ளிகள் உயர்ந்து 60,927.643 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 117.70 புள்ளிகள் உயர்ந்து 18,132.30 புள்ளிகளாகவும் ஏற்றத்துடன் முடிவடைந்தது.






இன்று காலையில் மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 404.21 புள்ளிகள் உயர்ந்து 60,970.63 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 119.45 புள்ளிகள் உயர்ந்து 18,134.05 புள்ளிகளாகவும் வர்த்தகமானது.


தேவை அதிகரிப்பு:


சீனாவில் கோவிட் கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக வெளியான அறிக்கைகளால், தேவை அதிகரிக்கும் சூழலால், உலோக பங்குகள் பிரகாசித்தன என் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


லாபம் - நஷடம்:


அதானி போர்ட்ஸ், ஆசியன் பெயிண்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஃபினான்ஸ், பஜாஜ் ஆட்டோ, ஏர்டெல், கோடாக் மகேந்திரா, எஸ்.பி.ஐ, டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டெக் மகேந்திரா, டைட்டான் நிறுவனம், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் காணப்பட்டன.


ரூபாய் மதிப்பு:






இந்நிலையில், இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பானது 20 காசுகள் குறைந்து 82.85 ரூபாயாக உள்ளது.


Also Read: Gold, Silver Price Today : இன்றே தங்கத்தை அள்ளுங்கள்.. மாறாத விலையில் தங்கம், வெள்ளி.. முழு விலை நிலவரம்.!.


Also Read: Vegetables Price: உச்சத்தில் சின்ன வெங்காயம் விலை... தக்காளி, பீன்ஸ், கேரட் நிலவரம் எப்படி...?