கடந்த சில தினங்களாக உள்நாடு மற்றும் வெளிநாட்டு தாக்கங்களால் இந்திய பங்கு சந்தை பெரும் சரிவை சந்தித்தது. இந்நிலையில், தற்போது இந்திய பங்குசந்தை ஏற்றத்தில் காணப்படுவது முதலீட்டாளர்களிடையே சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.


பங்குசந்தை நிலவரம்:


மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 139.91புள்ளிகள் உயர்ந்து 58,214.59 புள்ளிகளாகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 44.40 புள்ளிகள் உயர்ந்து 17,151.90 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது. 


அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித முடிவு அறிவிப்புக்கு முன்னதாக உள்நாட்டு குறியீடுகள் புதன்கிழமை ஏற்றத்தில் காணப்பட்டன.






தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 17,150 புள்ளிகளுக்கும், பிஎஸ்இ சென்செக்ஸ் 58,200 புள்ளிகளுக்கும், பேங்க் நிப்டி 40,000 புள்ளிகளுக்கும் கீழ் நிலைபெற்றது. 


தகவல் தொழில்நுட்ப (ஐடி) பங்குகள் 1% க்கும் அதிகமாக உயர்ந்ததால் 13 முக்கிய துறை குறியீட்டெண்களில் 12 மேம்பட்டன. நிஃப்டி 50 பங்குகளில் 36 பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின.


கிரெடிட் சூயிஸ் மீட்புக்குப் பிறகு, வங்கி தொடர்பான கவலைகள் மேலும் தணிந்ததால், இந்திய பங்குகள் புதன்கிழமை உயர்ந்தன, அதே நேரத்தில் முதலீட்டாளர்கள் அமெரிக்க பெடரல் ரிசர்வ் விகித முடிவை எதிர்பார்த்துள்ளனர்.


இன்று காலை தொடக்கத்தில், மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ்  300.24 அல்லது 0.51% புள்ளிகள் உயர்ந்து 58,392.72 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 86.25 அல்லது 0.50% புள்ளிகள் உயர்ந்து 17,193.75 புள்ளிகளாகவும் வர்த்தகமானது. 


நிஃப்டி 50-ல் ஹெச்டிஎஃப்சி லைஃப், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், சன் பார்மா மற்றும் டாடா கன்ஸ்யூமர் ஆகிய பங்குகள் ஏற்றத்திலும், பிபிசிஎல், என்டிபிசி, கோல் இந்தியா, அதானி போர்ட்ஸ் மற்றும் அதானி எண்டர்பிரைசஸ் ஆகிய பங்குகள் விலை இறக்கத்திலும் வர்த்தகமாயின.   


Also Read: உங்கள் நிதி எதிர்காலத்தைப் பாதுகாத்திடுங்கள்: உங்கள் இலக்கை அடைய 5 புத்திசாலித்தனமான முதலீடுகள்


Also Read: TN Agri Budget 2023 : 10 லட்சம் குடும்பங்களுக்கு பழச் செடிகள் விநியோகம்...யார் யாருக்கு தெரியுமா...வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு...!