தேசிய பங்குச்சந்தை நிஃப்டி இன்று ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் ஒரு நிலையற்ற தன்மையில் இருந்துவந்தது. பங்குச்சந்தை தொடங்கியவுடன் சரிந்தது. காலை முதல் மதியம் வரை இரண்டு முறை 17,200 புள்ளிகளை பெற்று ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டது. இரண்டு முறைகள் அதிகரித்த அதன் வர்த்தகம் இறுதியில் 102 புள்ளிகள் சரிந்தது. 17221 புள்ளிகளுடன் வர்த்தகம் முடிவடைந்தது. . இந்தியா VIX பங்குகள் 1.59% உயர்ந்துள்ளதால், இன்று பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டது. பங்குச்சந்தையில் பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் பங்குகள் சரிவில் இருந்தன. சன் பார்மா மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி பங்குகள் உயர்ந்து நிஃப்டி 17,200 புள்ளிகள் பெற அடித்தளமிட்டது.
மேலும் நிஃப்டியில் சில பங்குகள் நாளின் குறைந்த நிலையில் இருந்து மீண்டு வந்தது. கீழ் மட்டத்தில் இருந்து மீண்ட பங்குகள் நாளை இவைகள் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நாளின் குறைந்த அளவிலிருந்து மீண்ட பங்குகள் கன்ஃபின்ஹோம், GPPL,லால்பத்லாப் மற்றும் ராம்கோசெம் ஆகும். மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 312 புள்ளிகள் உயர்ந்து 58,100 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 88 புள்ளிகள் உயர்ந்து 17,309 புள்ளிகளில் முடிவடைந்தது. சென்ற வாரம் புதிதாக உருமாறியுள்ள ஒமைக்ரான் வைரஸ் கர்நாடகாவில் 2 பேருக்கு இருந்தது கண்டறியப்பட்டதால், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FII)தங்களது பங்குகளை விற்பனை செய்தது. அதனால் சில நாட்களாக லார்ஜ்ஸ்கேப் பங்குகளில் பேங்க் மற்றும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.
நேற்று நிஃப்டி 50 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்த நிறுவனங்கள், சன் ஃபார்மா, கோட்டக் வங்கி, மாருதி, டாடா கன்ஸ்யூமர், ஹீரோ மோட்டோ கார்ப், மஹிந்திரா, பஜாஜ் ஆட்டோ, எல் அண்ட் டி, ஹெச்டிஎப்சி லைஃப் ஆகியவை ஆகும். பஜாஜ் ஃபின்செர்வ், பஜாஜ் ஃபின்கார்ப், அதானி போர்ட்ஸ், ஐடிசி, ஒஎன்ஜிசி, ஜேஎஸ்டபுள்யு ஸ்டீல்ஸ், விப்ரோ ஆகியவை சரிவை சந்தித்தன. சிலவாரங்கள் முன் புதிய வேரியன்ட் ஓமைக்ரான் குறித்த அச்சம் வெளியானபோதே பங்குச்சந்தைகளை கடும் வீழ்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தது. அது நேற்று கடும் உயர்வை சந்தித்ததில் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அமெரிக்க நாணயக் கொள்கை முடிவிற்குப் பிறகு உலகளாவிய சந்தைகளில் சாதகமான போக்கு இருந்தது, இன்று காலை ஆரம்ப வர்த்தகத்தில் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் சுமார் 500 புள்ளிகள் வரை உயர்ந்தது. தொடக்க வர்த்தகத்தில் 30-பங்கு குறியீடு 494.12 புள்ளிகளாக 0.86 சதவீதம் உயர்ந்து 58,282.15 ஆக இருந்தது.