இன்றைய பங்குச்சந்தை நிலவரம்:


வாரத்தின் முதல் நாளான இன்று காலை முதலே சரிவுடன் காணப்பட்ட பங்குச்சந்தை இறக்கத்துடன் முடிவடைந்தது.  வர்த்தக நேர முடிவில்  மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1404.39 புள்ளிகள் அல்லது 2.59 சதவீதம்  சரிந்து 52,899.05  ஆகவும் தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி புள்ளிகள் அல்லது 2.57 சதவீதம் சரிந்து 16,205 புள்ளிகளாகவும் வர்த்தகமானது. தொடர்ந்து பங்குச்சந்தை சரிவை சந்தித்து வருகிறது.  பங்குசந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.






காலை நேர நிலவரம்:


காலை 9.28 மணியளவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1432.52 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்தது.  அதன்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,432.52 புள்ளிகள் (2.64%) சரிந்து, 52,870.92 புள்ளிகளிலும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 410.10 புள்ளிகள் (2.53%) குறைந்து 15,7791.70 புள்ளிகளிலும் வர்த்தகமானது. 


அமெரிக்க பங்குச்சந்தைகள் வீழ்ச்சி அடைந்ததன் எதிரொலியாக இந்திய பங்குசந்தைகளும் வீழ்ச்சியடைந்தன. அமெரிக்காவில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் உயர்ந்ததால் பங்குசந்தைகள் வீழ்ச்சி அடைந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


இந்திய ரூபாய் மதிப்பு சரிவு:


அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.78 ஐ தாண்டியுள்ளது. அதன்படி, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 36 காசு சரிந்து, புதிய உச்சமான ரூ.78.29-ஐ தொட்டுள்ளது.






சென்செக்ஸ், நிஃப்டி:


பிஎஸ்இ ஆசியாவின் மிகப் பழமையான பங்குச் சந்தையாகும், மேலும் உலகின் 10 ஆவது பழமையான பங்குச் சந்தையாகும். நிஃப்டி என்பது ஒரு முக்கிய இந்திய பங்குச் சந்தைக் குறியீடு ஆகும்.






இது தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள 50 பெரிய இந்திய நிறுவனங்களின் சராசரி எடையைக் குறிக்கிறது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் இரண்டு முக்கிய பங்கு குறியீடுகளில் இதுவும் ஒன்றாகும்.


பங்குகளின் நிலவரம்:


நிதித்துறை மற்றும் வங்கிகள் சார்ந்த பங்குகளின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்தன. பஜார்ஜ் ஃபினான்ஸ், இந்துஸ்லாந்து வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிகளின் பங்கு மதிப்பு குறைந்த புள்ளிகளில் நஷ்டத்தில் வர்த்தகமானது. டாட்ட நிறுவனத்தின் டி.சி.எஸ்., டெக் மஹிந்திரா, ரிலையன்ஸ் நிறுவனம் உள்ளிட்டவைகளின் பங்குகள் மதிப்பு வீழ்ச்சியடைந்தன.


பங்குச்சந்தையில் 30 பங்குகளில் நான்கு நிறுவனத்தின் பங்குகள் மட்டுமே ஏற்றத்துடன் வர்த்தகமாகியது. 


நெஸ்லே இந்தியா, இந்துஸ்தான் யூனிலிவர், மாருதி சுசூகி, பவர் கிரிட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு ஏற்றத்துடன் வர்த்தகமாகின.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண