இந்திய பங்குச்சந்தை சரிவுடன் நிறைவடைந்துள்ளது. மூன்றாவது நாளாக பங்குச்சந்தை சரிவுடன் முடிவடைந்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 494.75 அல்லது 0.61% புள்ளிகள் சரிந்து 81,006.61 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 221.50 அல்லது 0.89% புள்ளிகள் சரிந்து 24,749.80 ஆகவும் வர்த்தகமாகியது. வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே பங்குச்சந்தை சரிவுடன் காணப்பட்டது.
சர்வதேச சந்தைகளில் நிலவும் பொருளாதார நிலை காரணமாக இரண்டு நாட்களாக சர்வதேச பங்குச்சந்தைகளில் சரிவு காணப்பட்டது. அந்த நிலை இந்திய பங்குச்சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இன்றைய வர்த்தக நேர முடிவில் நிஃப்டி 24 ஆயிரம் புள்ளிகளில் வர்த்தகமானது.
பஜாஜ் ஆட்டோ, ஸ்ரீராம் ஃபினான்ஸ், ஹீரோ மோட்டர்கார்ப், நெஸ்லே, எம்&எம் ஆகியவை ஏற்றட்டத்துடனும் டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ், எல்&டி, பவர்கிரிட் காப், எஸ்.பி.ஐ. உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவுடனம் வர்த்தகமாகின.
உலக அளவில் ஆட்டோமொபைல், நிதி உள்ளிட்ட துறைகள் சரிவை சந்தித்துள்ளதால் இந்திய பங்குச்சந்தையிலும் அதன் தாக்கம் இருக்கிறது. பண்டிகை காலம் என்பதால் பங்குச்சந்தைகள் சரிவுடன் இருப்பது முதலீட்டாளர்களை சற்று ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பு:
அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 8 பைசா குறைந்து 84.07 ஆக இருந்தது. இது புதன்கிழமை 83.99 ஆக இருந்தது.
லாப - நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்:
இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, பவர்கிரிட் கார்ப்ரேசன்,லார்சன், எஸ்.பி.ஐ., டி.சி.எஸ்.,ஹிண்டாலோ, ரிலையன்ஸ், ஹெச்.சி.எல். டெக், இந்தஸ்லேண்ட் வங்கி ஆகிய நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமானது.
பஜாஜ் ஆட்டோ, ஸ்ரீராம் ஃபினான்ஸ், நெஸ்லே, எம்&எம், பஜாஜ் ஃபின்சர்வ், அல்ட்ராடெக் சிமெண்ட், அதானி எண்டர்பிரைசிஸ், டாடா கான்ஸ் ப்ராட், க்ரேசியம்,. டைட்டன் கம்பெனி, மாருதி சுசூகி, ஆக்ஸிஸ் வங்கி, எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா,டாடா ஸ்டீல், டாடா மோட்டர்ஸ், பிரிட்டானியா, ஹெட்.டி.எஃப்.சி. வங்கி, ஹெச்.யு.எல்., என்.டி.பி.சி., ஓ.என்.ஜி.சி., ஈச்சர் மோட்டர்ஸ், அப்பல்லோ மருத்துவமனை, கோல் இந்தியா, ட்ரெண்ட், ஜெ.எஸ்.டபுள்யு, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஐ.டி.சி, அதானி போர்ட்ஸ், விப்ரோ, சன் ஃபார்மா, பாரத் எலக்ட்ரிக்கல்ஸ், சிப்ளா, டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ், ஹெச்.டி.எஃப்.சி. லைஃப், ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்துடன் வர்த்தகமாகின.