வாரத்தின் கடைசி நாளான இன்று பெரிய மாற்றம் இல்லாமல் வர்த்தகம் தொடங்கியது.  மும்பை பங்குச்சந்தை குறியீட்டு சென்செக்ஸ் குறியீடு 98புள்ளிகள் (0.20%) அதிகரித்து 48789.23 புள்ளிகளாகக் காணப்பட்டன. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி குறியீட்டு எண் 13.75 புள்ளிகள் குறைந்து (1.06%) 14,682.75 புள்ளிகளாக இருந்தது.நேற்று, ரம்ஜான் திருநாள் பண்டிகை மும்பை பங்குச் சந்தையும், தேசிய பங்குச் சந்தையும் விடுமுறை அளிக்கப்பட்டன. இன்று காலை 48898.93 புள்ளிகளுடன் சென்செக்ஸ் தொடங்கியது.  

கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலையில் நாடு சிக்கி தவிக்கும் நிலையில், இந்த சரிவு  முதலீட்டாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இன்றைய நாள் முடிவில், நிஃப்டி குறியீட்டு எண் 14,000 புள்ளிகளுக்கு கீழே இறங்கலாம் என்று கணிக்கப்படுகிறது.   

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 32 ரூபாய் குறைந்துள்ளது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.75.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோ வெள்ளி  ரூ.75,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனிடையே, இன்று அக்ஷய திரிதியை முன்னிட்டு,  தங்கம் முதலீடு செய்யும் திட்டத்தை ஏர்டெல் அறிமுகம் செய்தது. டிஜிகோல்ட் என்ற திட்டத்தை சேஃப்கோல்ட் நிறுவனத்துடன் கைகோத்து ஏர்டெல் அறிமுகம் செய்துள்ளது ஏர்டெல் தேங்க்ஸ் செயலி மூலம் 24கேரட் தங்கத்தை வாடிக்கையாளர்கள் முதலீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலீடு செய்த தங்கத்தை ஏர்டெல் வங்கியில் கணக்கு வைத்துள்ள உங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர் என யாருக்கு வேண்டுமானாலும் ஃகிப்ட் என்ற முறையிலும் அனுப்பலாம். அந்த வசதியில் இந்த டிஜிட்டல் வங்கியில் உள்ளது.