இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. சென்செக்ஸ், நிஃப்டி வரலாறு காணாத அளவில் உயர்ந்து சாதனை படைத்துள்ளது.


இந்திய பங்குச்சந்தை நிலவரம்:


சென்செக்ஸ் 481 புள்ளிகள் உயர்ந்து 79,922.89  ஆகவும் நிஃப்டி 137 புள்ளிகள் உயர்ந்து 24,261.20 ஆகவும் வர்த்தக்கதை தொடங்கியது. 


வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே காலை 9.15 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 0.72% உயர்ந்து 80,013.77 புள்ளிகளாகவும் நிஃப்டி 0.7% 24,291.75 புள்ளிகளாகவும் வர்த்தகமாகியது. 


காலை 10.44 மணி நிலரவப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 543.32 அல்லது 0.66% புள்ளிகள் உயர்ந்து 79,965.07 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 160.15அல்லது 0.65% புள்ளிகள் உயர்ந்து 24,279.60 ஆக வர்த்தகமானது. 


பங்குச்சந்தை வரலாற்றில் முதன்முறையாக சென்செக்ஸ் 80 ஆயிரம் புள்ளிகளை தொட்டு வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. நிஃப்டி 24 ஆயிரம் புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 


கடந்த வாரம் வியாழக்கிழமை சென்செக்ஸ் 79 ஆயிரம் புள்ளிகளை கடந்து வர்த்தமாகியது. கடந்த ஒரு வாரமாக இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. நேற்றைய வர்த்தக நேர தொடக்கத்தில் ஏற்றத்துடன் தொடங்கிய நிலையி, உச்சம் தொட்டு சரிவுடன் நிறைவடைந்தது. 


நாட்டின் முதன்மையான தனியார் கடன் வழங்குநரான ஹெச்.டி.எஃப்.சி (HDFC) வங்கி பங்குகள் உயர்வுடன் வர்த்தகமாகி வரும் நிலையில், பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. ஹெச்.டி.எஃப். சி. பங்குகள் 3.5% உயர்ந்துள்ளன. 


ஹெச்.டி.எஃப்.சி வங்கியைத் தவிர, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி, பார்தி ஏர்டெல் மற்றும் நெஸ்லே ஆகியவை அதிக லாபத்தைப் பெற்றன. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், சன் பார்மா, இன்ஃபோசிஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகியவை பின்தங்கியுள்ளன. 


வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 545.34 அல்லது 0.69 % புள்ளிகள் உயர்ந்து 79,986.80 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 162.65அல்லது 0.67% புள்ளிகள் உயர்ந்து 24,286.50 ஆக வர்த்தகமானது. 


டாடா கான்ஸ் ப்ராட், ஏசியன் போர்ட்ஸ், கோடாக் மஹிந்திரா, ஹெச்.டி.எஃப்சி., ஆக்ஸில் வங்ஜ்கி, இந்தஸ்லேண்ட், வங்கி, எஸ்.பி.ஐ., அப்பல்லோ மருத்துவமனை, ஈச்சர் மோட்டர்ஸ், பவர்கிரிட் கார்ப், பஜாஜ் ஃபினான்ஸ், கோல் இந்தியா, அதானி எண்டர்பிரைசர்ஸ், ஹெச்.சி.எஃப்.சி. லைஃப், டாடா ஸ்டீல், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, பஜாஜ் ஃபின்சர்வ், பிரிட்டானியா, மாருதி சுசூகி, ஐ.டி.சி., சன் பார்மா, டெக் மகேந்திரா, இன்ஃபோசிஸ், நெஸ்லே, ஹீரோ மோட்டர்கார்ப், பஜாஜ் ஆட்டோ,ம் அல்ட்ராடெக் சிமெண்ட், விப்ரோ, எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, பாரதி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமாகின. 


டி.சி.எஸ்., டைட்டன் கம்பெனி, ரிலையன்ஸ், டாடா மோட்டர்ஸ், ஹிண்டால்கோ, லார்சன், சிப்ளா, டிவிஸ் லேப்ஸ், ஓ.என்.ஜி.சி. க்ரேசியம் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகின.