இந்திய பங்குச்சந்தை கடந்த ஐந்து செசன்களாக தொடர்ந்து சரிவடைந்துள்ளது. பங்குச்சந்தை சரிவுக்கான காரணங்களாக வல்லுநர்கள் சொல்வதை இங்கே காணலாம்.
இந்திய பங்குச்சந்தை (11.02.2025) வர்த்தக நேரத்தில் ஏற்பட்ட கடும் சரிவால் முதலீட்டாளர்களுக்கு ரூ.9 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,018.20 அல்லது 1.32% புள்ளிகள் சரிந்து 76,293.60 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 309.80 அல்லது 1.32% புள்ளிகள் சரிந்து 23,071.80 ஆகவும் வர்த்தகமாகியது. நிஃப்டி 23 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் குறைந்து வர்த்தகமானது.
FII முதலீட்டாலர்கள் பங்குகளின் விற்பனை, மெதுவான பொருளாதார வலர்ச்சி, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு ஆகியவற்றின் காரணமாக பங்குச்சந்தை தொடர்ந்து சரிடவடைந்து வருகிறது. சென்செக்ஸ் 80 ஆயிரம் புள்ளிகளிலும் நிஃப்டி 26 ஆயிம் புள்ளிகளிலும் வர்த்தகமாகி வந்தது. பங்குச்சந்தை வரலாற்றில் புதிய உச்சம் தொட்டது. ஆனால், இப்போது பங்குச்சந்தை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது.
பங்குச்சந்தையில் கடந்த 5 நட்களில் சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் வரை குறைந்துள்ளது. நிஃப்டி 667 புள்ளிகள் சரிந்துள்ளது. பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவால் முதலீட்டாளர்கள் இதுவரை ரூ.18 லட்சம் கோடி இழந்துள்ளனர். சந்தை மொத்த மதிப்பு ரூ.426 லட்சம் கோடியில் இருந்து ரூ.408 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.
அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குகள் விற்பனை (FPI) விற்பனை:
அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளை தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றனர். அக்டோபர், 2024 முதல் விற்பனை தொடர்கிறது. US bond yields, அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வு, ஃபெரட்ல் வட்டி விகிதம் குறைப்பு பற்றிய அறிவிப்பு வெளியிடாதது ஆகிய காரணங்களால் விற்பனை செய்வது தொடர்கிறது. பிப்ரவரியில், foreign institutional investors பங்குகள் விற்பனை தொடர்வதால் ரூ. 2.75 லட்சம் கோடி மதிப்பிலான இந்திய பங்குச்சந்தையில் இருந்து வெளியே சென்றுள்ளது.
Q3 நிலவரம்:
இந்திய நிறுவனங்களின் 2025-26 -ம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டின் வருவாய் எதிர்பாராத குறைவாக உள்ளது. நிறுவனங்கள் லாபம் அதிகம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தன. ஆனால், முடிவுகள் வேறாக இருந்தன. ஆட்டோமொபைல் ஆகிய உற்பத்தி துறைகள் மீளும் வழிகளை ஆராய்ந்து வருகின்றன.
இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு:
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 88 வரை குறைந்துள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. 2025-ம் ஆண்டில் மட்டும் இந்திய ரூபாயின் மதிப்பு 3 சதவீதம் குறைந்துள்ளது.
பிப்ரவரி,11 2025- அன்று, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61 பைசா அதிகரித்து 86.84 ஆக இருந்தது.
அமெரிக்க வரி விதிப்பு முறை:
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு பொருளாதார ரீதியாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், சட்டவிரோத குடியேற்றத்துக்குத் தடை, விசா கட்டுப்பாடு உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகளுக்கு வரி விதிப்பை அறிமுகம் செய்தார். இரும்பு, அலுமினிய இறக்குமதிக்கு தலா 25 சதவீதம் வரை வரி விதிக்கப்படலாம் என அறிவிப்பு வெளியானது பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதோடு, வெளிநாட்டு நிதி வெளியேற்றம் தொடர்வதாலும் பங்குச்சந்தை கடுமையான சரிவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.