இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. 


வர்த்தக நேர தொடக்கத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 238.52 அல்லது 0.27% புள்ளிகள் உயர்ந்து 82,725.28 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 70.05 அல்லது 0.24% புள்ளிகள் உயர்ந்து 25,296.85 ஆக வர்த்தகமாகியது.


அமெரிக்க வட்டி விகிதம் குறைக்கப்படும் என்ற நம்பிக்கை அதிகரித்திருப்பதால் ஈக்விட்டி மார்க்கெட் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. 


சென்செக்ஸில் பஜாஜ் ஃபின்சர்வ், ஹெச்.சி.எல். டெக், ஐ.டி.சி., டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ், ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்டவை ஏற்றத்தில் உள்ளன. 


நிஃப்டி 12-வது செசெனாக ஏற்றத்தில் உள்ளது. டி.வி.எஸ். மோட்டர் ஆகஸ்ட் மாத இரண்டு சக்கர வாகங்கள் வளர்ச்சி 13% அதிகரித்துள்ளாது. ஹூரோ மோட்டர்கார்ப் உள்ளூர் விற்பனை 5% அதிகரித்துள்ளது. 


இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஏப்ரல் - ஜூன் மாதத்தில் 6.7% உயர்ந்துள்ளது.


லாப - நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்:


பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஆட்டோ, எல்.டி.ஐ. மைண்ட்ட்ரீ, ஹெச்.சி.எல். டெக், பாரதி ஏர்டெல், எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, இந்தஸ்லேண்ட் வங்கி, ஹீரோ மோட்டர்கார்ப், இன்ஃபோசிஸ், சிப்ளா,சன் ஃபார்மா, விப்ரோ, ஹெச்.டி.எஃப். சி. லைப், ஸ்ரீராம் ஃபினான்ஸ், டிவிஸ் லேப்ஸ், பி.பி.சி.எல்.,டாடா மோட்டர்ஸ், டெக் மஹிந்திரா, லார்சன், என்.டி.பி.சி., எம்& எம், ஆக்ஸிஸ் வங்கி,பிரிட்டனியா, மாருதி சுசூகி, ரிலையன்ஸ், ஐ.டி.சி., அல்ட்ராடெக் சிமெண்ட், அப்பல்லோ மருத்துவமனை, ஓன்.என்.ஜி.சி., பவர்கிரிட் கார்ப்,, டி.சி.எஸ். எஸ்.பி.ஐ., அதானி போர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமானது. 


க்ரேசியம், கோடாக் மஹிந்திரா, அதானி எண்டர்பிரைசிஸ், நெஸ்லே, கோல் இந்தியா, டாக்டர், ரெட்டிஸ் லேப்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், டாடா ஸ்டீல், டைட்டன் கம்பெனி, ஈச்சர் மோட்டர்ஸ், ஹிண்டால்கோ, ஹெச்.யு.எல் அகிய நிறுவனங்கள் நஷ்டத்துடன் வர்த்தகமாகின.