டாடா நிறுவனம் கூபே வடிவமைப்பு கொண்ட ஒரு எஸ்யூவி காரை அறிமுகப்படுத்த நீண்ட நாட்களாக திட்டமிட்டு வந்தது. சுமார் இரண்டு ஆண்டுகளாக இந்த கார்கள் வடிவமைப்பிலிருந்து நிலையில், தற்போது இந்த கார் தயாரிக்கப்பட்டு விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் ஏற்கனவே இதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் கார் அறிமுகப்படுத்தப்பட்டது.
அப்பொழுது இந்த காரில் கம்பஷன் இன்ஜின் வெர்ஷன் காட்சிப்படுத்தப்பட்டது. ஆனால் அந்த சமயம் இது குறித்தான விலைகள் ஏதும் வெளியாகவில்லை.
பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்:
இந்நிலையில் தான் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களுடன் கூடிய Tata Curvv இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு விதமான இன்ஜின் ஆப்ஷன்களிலும் விற்பனைக்கு வருகிறது. பல்வேறு விதமான வேரியன்ட் குறித்த விபரங்களும் ஏற்கனவே வெளியாகியிருந்தன.
இந்த இரண்டு காரின் வடிவமைப்பும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வடிவமைப்பில் தான் இருக்கிறது. டாடா கர்வ் காரின் கம்பஷன் இன்ஜின் வெர்ஷனை பொறுத்தவரை மொத்தம் மூன்று விதமான இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. முக்கியமாக 1.2லிட்டர் டிஜிஐ டர்போ சார்ஜர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 123 எச்பி பவரையும் 225 என்எம் டார்க் திறனையும் வழங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. டாடா நெக்ஸான் காரில் உள்ள அதே 1.2லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.
இதில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் 118 பிஎச்பி பவரையும் 170 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 1.5 லிட்டர் டீசல் இன்ஜினை பொறுத்தவரை 116 பிஎச்பி பவரையும் 260 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
விலை எவ்வளவு தெரியுமா?
இந்த காரின் விலையை பொருத்தவரை பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் உடன் உள்ள கார் குறைந்தபட்சமாக ரூபாய் 9,99,990 என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. அடுத்ததாக டீசல் இன்ஜின் ஆப்ஷனை பொறுத்தவரை ரூபாய் 11,49,990 என்ற ஆரம்ப விலையில் கிடைக்கிறது.
அடுத்ததாக டிசிஐ கியர் ஆப்ஷனை பொருத்தவரை ரூபாய் 12,49,990 என்று ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. ஜிடிஐ இன்ஜின் ஆப்ஷனை பொறுத்தவரை ரூ 13,49,990 என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI