மத்திய அரசின் உத்தரவின் படி ஆதார்கார்டை பான்கார்டுடன் இணைக்க எந்தவித சிரமமும் இல்லாமல் ஒரு எஸ்எம்எஸ் மூலமாக மேற்கொள்வதற்கான வசதிகள் உள்ளன.


மத்திய, மாநில அரசுகள் என எதுவாக இருந்தாலும் அவற்றின் நலத்திட்ட உதவிகளைப்பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியமான ஒன்றாக உள்ளது. இதோடு மட்டுமின்றி வங்கிகள், கேஸ் இணைப்பு பெறுவது போன்ற அனைத்துச் சேவைகளுக்கு ஆதார் கார்டுகள் கட்டாயமாக்கப் பட்டுவருகிறது. இதன் வரிசையில் பான்கார்டு வைத்திருக்கும் அனைவரும் அதனை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டதோடு அதற்கான கால அவகாசத்தினையும் வழங்கியுள்ளது.





இதோடு வங்கிகள்  அனைத்தையும் அதன் வாடிக்கையாளர்களை ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்குமாறு வலியுறுத்திவருகின்றனர். குறிப்பாக இந்தியாவின் 44 கோடிக்கும் மேலான வாடிக்கையாளர்களைக்கொண்டுள்ள மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அதன் வாடிக்கையாளர்களை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணினை பான் கார்டுடன் இணைப்பதற்கு கால அவகாசம் வழங்கியுள்ளது. ஒரு வேளை குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் மாறுதல் செய்யாவிடில் ஆதார் எண்ணினை இணைக்காமல் இருக்கும் பான் கார்டு செல்லாது எனவும் அறிவித்துள்ளது.  இப்படி பான் கார்டு செல்லாது என்று அறிவிக்கப்பட்டால் அதன் தொடர்ச்சியாக அதனைப்பயன்படுத்தி நாம் வாங்கியுள்ள எஸ்.பிஐ கார்டு போன்றவற்றிலும் மக்கள் பிரச்சனைகள் சந்திக்க நேரிடும்.


எனவே தான் வங்கிகள் அதிலும் எஸ்.பிஐ வங்கி ஆதார் எண்ணினை பான் கார்டுடன் இணைப்பது கட்டாயம் என அதன் வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து வாடிக்கையாளர்கள் பலர் பல பிரசிவுங் சென்டர்களுக்குச்சென்று இந்த வேலைகளை செய்துவருகின்றனர்.  பலர் என்னசெய்வது என்று தெரியாமல் யோசித்துவருகின்றனர். ஆனால் இவை அப்படி கஷ்டமான விஷயம் இல்லை. நாம் வீட்டிலேயே வெறும் 5 நிமிடத்தில் ஆதார் எண்ணினை பான் கார்டுடன் இணைத்துவிடமுடியும். அதற்கான வசதிகளையும் மத்திய அரசு வழங்கியுள்ளது.





ஆதார் கார்டை பான்கார்டுடன் இணைப்பதற்கான வழிமுறைகள்:


ஆதார் எண்ணினை பான்கார்டுடன் இணைப்பதற்கு நாம் இரண்டு வழிமுறைகளை மேற்கொள்ளலாம். முதலில் வருமானவரித்துறையின் இணையப்பக்கத்திற்கு சென்று link Aadhar என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.


பின்னர் அதில் கேட்கப்பட்டிருக்கும் அடிப்படை விஷயங்களை டைப் செய்துக்கொண்டு எளிதில் இணைத்துவிடமுடியும்.





இதேப்போன்று நாம் SMS மூலமாகவும் ஆதார் எண்ணினை பான்கார்டுடன் இணைத்துவிடமுடியும். அதற்கு முதலில் உங்களுடைய மொபைல் எண்ணிலிருந்து UIDPAN space 12 digit Aadhaar space 10 digit PAN என டைப் செய்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப வேண்டும். உதாரணமாக உங்களுடைய ஆதார் எண் 123456789101 ஆகவும் பான் நம்பர் APDAC8844R ஆக இருக்கும் பட்சத்தில் நீங்கள் UIDPAN 111122223333 AAAPA9999Q  என டைப் செய்து அனுப்ப வேண்டும். இவ்வாறு நீங்கள் வீட்டில் இருந்தே மேற்கொள்ளும் வெறும் 5 நிமிடங்களில் உங்களது பான் கார்டு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும். எனவே மத்திய அரசின் உத்தரவின்படி, எந்த சிரமமும் இல்லாமல் இனி வீட்டிலேயே அனைவரும் பான் கார்டினை ஆதாருடன் இணைத்துவிடலாம்.