அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 41 பைசாக்கள் குறைந்து 79.36 என்ற அளவில் வரலாறு காணாத வீழ்ச்சியை அடைந்துள்ளது.






வர்த்தக பற்றாக்குறை:


ஜூன் மாதத்தில் இந்தியாவின் வர்த்தக ஏற்றுமதி (தங்கம் கச்சா எண்ணெய் தவிர) பொருட்களை ஏற்றுமதி அதிகரித்தாலும் , தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரித்ததால் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இதனால் டாலரின் ஆதிக்கம் அதிகரித்து, இந்திய ரூபாயின் மதிப்பு சரிய தொடங்கியது. பொருளாதார வல்லுநர்கள் கூறுகையில், அமெரிக்க டாலரின் வலுவான தன்மை, உயரும் கச்சா எண்ணெய் விலைகள் மற்றும் பலவீனமான உலகளாவிய சந்தை ஆகிய காரணிகளே ரூபாயின் மதிப்புக்கு சரிவுக்கான காரணம் என்கின்றனர்.


ரூபாயின் மதிப்பு வலுப்பெறும்:


தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்படும் என்பதால், தங்கத்தின் மீதான விலை மதிப்பு உயரக் கூடும் , இதனால் தங்கத்தை வாங்குவோர் எண்ணிக்கை குறையக் கூடும். மேலும் தங்கம் விலை உயர்வால் இறக்குமதி செய்யப்படும் அளவும் குறையும் வாய்ப்பு அதிகம். இதனால் வர்த்தக பற்றாக்குறை இந்தியாவில் குறைய வாய்ப்புள்ளது. இதையடுத்து ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக சற்று வலுப்பெறும் என எதிர்பார்க்கலாம்.


பங்குச் சந்தைகள் நிலவரம்:


மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 100.42 புள்ளிகள் குறைந்து 53,134.35 புள்ளிகளில் முடிவடைந்தது. அதே நேரத்தில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 24.50 புள்ளிகள் குறைந்து 15,810.85 புள்ளிகளில் இன்று முடிவடைந்தது






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண