Rs 2,000 Notes Exchange: 2000 ருபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் மாற்ற பின்பற்றப்படும் வழிமுறைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


2000 ரூபாய் நோட்டுகள்:


பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற்ற மத்திய அரசு 2000 ரூபாய் நோட்டுகளை அறிவித்தது. இந்த நிலையில் தான்  2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு அறிவித்தது. அதைதொடர்ந்து, பொதுமக்கள் தங்களது கைகளில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில் செலுத்தி தங்களது கணக்கில் வரவு வைக்க கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. 98 சதவிகித 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற்றுவிட்டதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஆனால், இதுதொடர்பான விவகாரங்கள் அறியாத பலர் இன்னும் தங்களது கைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை வைத்துக்கொண்டுள்ளனர். அவர்களுக்கான கடைசி வாய்ப்பாக, நாடு முழுவதும் 19 இடங்களில் உள்ள பிராந்திய ரிசர்வ் வங்கி  அலுவலகங்களில் 2000 ரூபாய் நோட்டுகளை வழங்கி, அந்த பணத்த தங்களது கணக்கில் வரவு வைக்கலாம். நேரில் செல்ல இயலாதவர்கள் அஞ்சல் மூலமாகவும் குறிப்பிட்ட ஆர்பிஐ அலுவலகங்களுக்கு பணத்தை அனுப்பி, அதனை தங்களது வங்கிக் கணக்கில் வரவாக வைக்கலாம். அதன்படி, நேரில் சென்று பணத்தை மாற்றுவது எப்படி என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.


இதையும் படிங்க: Rs 2,000 Notes Exchange: கையில் இன்னும் ரூ.2000 நோட்டு உள்ளதா? எங்கெல்லாம் அதனை மாற்றலாம்? தெரிஞ்சுக்கோங்க


2000 ரூபாய் நோட்டை மாற்றுவதற்கான வழிமுறைகள்:



  • ரிசர்வ் வங்கி மற்றும் அதன் கிளைகளில் காலை 10 மணி தொடங்கி பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே, 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் பணிகள் நடைபெறுகின்றன

  • பத்து 2000 ரூபாய் நோட்டுகள் அதாவது 20 ஆயிரம் ரூபாயை ஒருவர் கொண்டு சென்றால், அவருக்கு உடனடியாக பணம் மாற்றி தரப்படும்

  • 10 நோட்டுகளுக்கும் அதிகமான 2000 ரூபாய் நோட்டுகளை கொண்டு சென்றால், உடனடியாக மாற்ற முடியாது. வங்கிக் கணக்கில் மட்டுமே வரவு வைக்க முடியும்

  • பத்து 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற செல்பவர்கள் ஆதார் போன்ற அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை ஒரிஜினல் மற்றும் நகல் ஆகியவற்றை கையுடன் கொண்டு செல்ல வேண்டும்

  • பத்திற்கும் அதிகமான 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற செல்பவர்கள் ஆதார் போன்ற அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை ஒரிஜினல் மற்றும் நகல் உடன், வங்கிக் கணக்கின் ஒரிஜினல் மற்றும் நகல் ஆகியவற்றையும் கையுடன் கொண்டு செல்ல வேண்டும்

  • ரிசர்வ் வங்கி மற்றும் அதன் கிளைகளில் வாடிக்கையாளர்கள் நாள்தோறும் அனுமதிக்கப்படுவதில்லை. முதலில் 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே ஒருவரால் உள்ளே அனுமதிக்கப்படுவர். தற்போது 21 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வாடிக்கையாளர்கள் அனுமதிக்கபப்டுவதாக வாடிக்கையாளர்கள் சிலர் கூகுள் மேப் கருத்துரை பெட்டியில் வேதனை தெரிவித்து வருகின்றனர்.